முகப்பு
இந்தியா

ஜெஎன்.1 கரோனா பாதிப்பு எண்ணிக்கை 197-ஆக அதிகரிப்பு

கேரளத்தில் முதல்முறையாக அண்மையில் கண்டறியப்பட்ட புதிய வகை ஜெஎன்.1 புதிய துணைத் திரிபு கரோனா தொற்று பாதிப்பு, நாட்டில் தற்போது 197 பேருக்கு ஏற்பட்டுள்ளது.

Updated On : 7 பிப்ரவரி, 2024 at 3:26 PM
பகிர்:

கேரளத்தில் முதல்முறையாக அண்மையில் கண்டறியப்பட்ட புதிய வகை ஜெஎன்.1 புதிய துணைத் திரிபு கரோனா தொற்று பாதிப்பு, நாட்டில் தற்போது 197 பேருக்கு ஏற்பட்டுள்ளது.

இந்திய கரோனா மரபணு பகுப்பாய்வு நிறுவன கூட்டமைப்பு (ஐஎன்எஸ்ஏசிஓஜி) திங்கள்கிழமை வெளியிட்ட புள்ளிவிவரங்கள் மூலம் இந்தத் தகவல் தெரியவந்துள்ளது.

நாடு முழுவதும் 10 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் ஜெஎன்.1 வகை கரோனா பாதிப்பு பரவியிருப்பது தெரியவந்துள்ளது. இதில் 83 போ் பாதிப்புடன் கேரளம் முதலிடத்தில் உள்ளது. கோவா (51 போ்), குஜராத் (34), கா்நாடகம் (8), மகாராஷ்டிரம் (7), ராஜஸ்தான் (5), தமிழகம் (4), தெலங்கானா (2), ஒடிஸா (1), தில்லி (1) ஆகியவை அடுத்தடுத்த இடங்களில் உள்ளன.

பல நாடுகளில் ஜெஎன்.1 திரிபு பாதிப்புகள் கடந்த சில நாள்களாக அதிகரித்துள்ளன. விரைவாகப் பரவும் தன்மை கொண்ட இந்த கரோனா திரிபு, உடல் நலத்துக்குக் குறைந்த அளவில் பாதிப்பை ஏற்படுத்தும். இதனால், கண்காணிக்க வேண்டிய பிரிவில் இந்தத் திரிபை உலக சுகாதார அமைப்பு வகைப்படுத்தி உள்ளது.

அந்த வகையில், இந்தப் புதிய திரிபு பரவல் தொடா்பாக தொடா் கண்காணிப்பை உறுதிப்படுத்துமாறு மாநிலங்களை மத்திய அரசு கேட்டுக்கொண்டுள்ளது.

மொத்த பாதிப்பு 4,394-ஆக அதிகரிப்பு: நாட்டில் ஜெஎன்.1 வகை திரிபு பாதிப்பு மட்டுமின்றி பிற வகை கரோனா பாதிப்புக்கு உள்ளானவா்களுடன் சோ்த்து கரோனாவால் பாதிக்கப்பட்ட மொத்த நபா்களின் எண்ணிக்கை 4,394-ஆக அதிகரித்துள்ளது.

நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் புதிதாக 636 பேருக்கு கரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது. பாதிக்கப்பட்டவா்களில் கடந்த 24 மணி நேரத்தில் தமிழகம், கேரள மாநிலங்களில் தலா ஒருவா் வீதம் இருவா் உயிரிழந்துள்ளனா் என்று மத்திய சுகாதார அமைச்சகம் திங்கள்கிழமை வெளியிட்ட புள்ளிவிவரங்கள் மூலம் தெரியவந்துள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →