நாளை கேரளம் செல்கிறார் பிரதமர் மோடி!
கேரள மாநிலம், திருச்சூரில் நாளை(ஜன.3) நடைபெறும் மாநாட்டில் பிரதமர் மோடி கலந்துகொண்டு உரையாற்ற உள்ளார்.
கேரள மாநிலம், திருச்சூரில் நாளை(ஜன.3) நடைபெறும் மாநாட்டில் பிரதமர் மோடி கலந்துகொண்டு உரையாற்ற உள்ளார்.
மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் வெற்றிகரமாக நிறைவேற்றியதற்காக பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவிக்கும் வகையில், தேக்கிங்காடு மைதானத்தில் மிகப்பெரிய மாநாட்டு நடைபெற உள்ளது. இந்த மாநாட்டில் பிரதமர் மோடி உரை நிகழ்த்த உள்ளார்.
இந்த மாநாட்டில் அங்கன்வாடி ஆசிரியர்கள், பணியாளர்கள், தொழில்முனைவோர், கலைஞர்கள், சமூக மற்றும் கலாசார ஆர்வலர்கள் உள்பட 2 லட்சத்துக்கும் மேற்பட்ட பெண்கள் இந்த மாநாட்டில் பங்கேற்க உள்ளனர்.
திருச்சூரில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்கும் நிகழ்ச்சியில் பல்வேறு துறைகளில் முத்திரை பதித்துள்ள பல்வேறு துறைகளைச் சேர்ந்த பெண்களும் கலந்துகொள்வார்கள் என பாஜக மாநிலத் தலைவர் கே.சுரேந்திரன் தெரிவித்துள்ளார்.
மோடியின் திருச்சூர் பயணம் தென் மாநில அரசியல் வரலாற்றில் ஒரு முக்கியத்துவமாக மாறும் என அவர் கூறினார்.