இந்தியா

ஆப்கனில் மீண்டும் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 5.1-ஆகப் பதிவானது

DIN

ஆப்கானிஸ்தானில் புதன்கிழமை மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.

ஆப்கானிஸ்தானில் இன்று (ஜன.3) பிற்பகல் 2.54 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது என்று தேசிய நில அதிர்வு மையம் கூறியுள்ளது. பூமிக்கடியில் 29 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 5.1 அலகுகளாகப் பதிவாகியுள்ளது.

முன்னதாக, இன்று நள்ளிரவு 12.28 மணிக்கு ஆப்கனின் பைசாபாத் மாகாணத்தில் இருந்து 126 கி.மீ. தொலைவில் 80 கி.மீ. ஆழத்தில் 4.4 ரிக்டர் அளவில் முதல் நிலநடுக்கம் பதிவானது.

அதனைத் தொடர்ந்து, பைசாபாத் மாகாணத்தில் இருந்து 100 கி.மீ. தொலைவில் 140 கி.மீ. ஆழத்தில் நள்ளிரவு 12.55 மணிக்கு 4.8 ரிக்டர் அளவில் இரண்டாவது நிலநடுக்கம் பதிவானது.

இந்நிலையில் இன்று (புதன்கிழமை) ஒரே நாளில் மூன்றாவது முறையாக ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கங்களால் கட்டடங்களும், வீடுகளும் குலுங்கியதால் மக்கள் அலறியடித்து வீட்டைவிட்டு வெளியேறி சாலைகளில் தஞ்சமடைந்துள்ளனர்.

கடந்த ஜனவரி 1-ஆம் தேதி ஜப்பானில் ஏற்பட்ட தொடர் நிலநடுக்கங்களால் இதுவரை 64 பேர் உயிரிழந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

புன்னகை பூவே....சரண்யா துராடி

அரசியலமைப்பு, இடஒதுக்கீட்டை அழிக்க பாஜக திட்டம்: ராகுல் குற்றச்சாட்டு

வைகாசி மாதப் பலன்கள்!

ஹார்திக் பாண்டியாவை விமர்சிக்க ஏபிடி வில்லியர்ஸுக்கு தகுதியில்லை: கம்பீர் காட்டம்!

மோடிக்கு விடைகொடுக்க நாட்டு மக்கள் தயாராகி விட்டனர்: மல்லிகார்ஜுன கார்கே

SCROLL FOR NEXT