'மனைவி வடமாநிலத்தவரா?': சர்ச்சை கிளப்பும் விளம்பரம்!
கர்நாடகத்தில் ரசம் பேஸ்ட் நிறுவனம் ஒன்று 'மனைவி வடமாநிலத்தவரா?' என்ற வாசகத்துடன் விளம்பரம் செய்திருப்பது இணையத்தில் விவாதத்தை கிளப்பியுள்ளது.
கர்நாடக மாநிலத்தில் ரசம் தயாரிக்கும் பேஸ்ட் (Rasam paste) விளம்பரம் வலைதளத்தில் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. 'மனைவி வடமாநிலத்தவரா? சில நொடிகளில் ரசம் தயார்' என்ற வாசகம் இடம்பெற்றுள்ள விளம்பரத்தை பலரும் விமர்சித்து வருகின்றனர்.
தனிநபர் ஒருவரால் எக்ஸ் தளத்தில் இந்த புகைப்படம் பகிரப்பட்டது. அதில் அவர் 'வடமாநில மற்றும் தென்மாநிலத்தவர்களை அவமதித்து எப்படி ஒரு விளம்பரத்தை எடுத்துள்ளார்கள்' எனப் பதிவிட்டுள்ளார்.
இது வட மாநிலத்தவரை அவமதிப்பது போல் உள்ளது என ஒரு தரப்பு விவாதிக்க, மற்றொரு தரப்பு 'இதிலென்ன தவறுள்ளது விளம்பரம்தானே, எளிதாக எடுத்துக்கொள்ளுங்கள்' என்கிறது.
Advertisement
Advertisement
இதையும் படிக்க: இந்தியாவுக்கு மட்டுமல்ல, உலகத்துக்கானது ஆதித்யா எல்-1: சோம்நாத்
'பெண்கள் மட்டும்தான் சமைக்கவேண்டும் என்பதை சொல்லாமல் சொல்கிறார்கள்' என்ற கருத்தும் கமெண்ட்களில் காணலாம். 'எல்லாவற்றிற்கும் புண்படாமல் வாழ்கையை எளிமையாக எடுத்துக்கொண்டு வேலையைப் பாருங்கள். எனக்கு இந்த விளம்பரம் சிரிப்பூட்டும் வகையில் உள்ளது. நான் இந்திரா ரசம் பேஸ்ட் கண்டிப்பாக வாங்குவேன்' என ஒருவர் பதிவிட்டுள்ளார்.
இந்த சர்ச்சையால் இணையத்தில் பேசுபொருளாகியுள்ளது இந்திரா ரசம் பேஸ்ட்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.