இந்தியா

பில்கிஸ் பானு வழக்கு: நீதிமன்ற தீர்ப்பை வரவேற்ற மம்தா

DIN

மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, பில்கிஸ் பானு வழக்கில் உச்ச நீதிமன்ற தீர்ப்பு வலுவானது மற்றும் துணிச்சல்மிக்கது எனத் தெரிவித்துள்ளார்.

பில்கிஸ் பானு வழக்கில், தண்டனை பெற்ற குற்றவாளிகளை முன்கூட்டியே விடுதலை செய்து குஜராத் அரசு பிறப்பித்த உத்தரவை உச்சநீதிமன்றம் ரத்து செய்து இன்று தீர்ப்பளித்துள்ளது.

இது குறித்து மம்தா பானர்ஜி பேசியதாவது:  “வலுவான மற்றும் துணிச்சல்மிக்க தீர்ப்பை அளித்ததற்கு நான் உச்சநீதிமன்றத்திற்கு நன்றி தெரிவித்துகொள்கிறேன். இந்த வழக்கு வன்கொடுமை செய்தவர்கள் சுதந்திரமாகவும் அதிகாரத்தை பெற்றும் வாழலாம் என்பதைக் காட்டுகிறது”

குஜராத் மாநிலத்தில் கடந்த 2002-இல் நடைபெற்ற கோத்ரா ரயில் எரிப்பு சம்பவத்தைத் தொடா்ந்து ஏற்பட்ட மதக் கலவரத்தில், ஐந்து மாத கா்ப்பிணியான பில்கிஸ் பானு, வன்முறையாளா்களால் கூட்டு பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கப்பட்டாா். பானுவின் மூன்று வயது பெண் குழந்தை உள்பட அவரது குடும்ப உறுப்பினா்கள் 7 போ் அந்தக் கலவரத்தில் கொல்லப்பட்டனா்.

தண்டனை காலம் நிறைவு பெறுவதற்கு முன்பாகவே இந்தச் சம்பவத்தோடு தொடா்புடைய குற்றவாளிகள் 11 போ் கடந்த ஆண்டு ஆகஸ்ட் 15-ஆம் தேதி சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஓய்வு பெற்ற துணைவேந்தர் வீட்டில் 100 பவுன் நகை திருட்டு

தாய்லாந்தில் மடோனா செபாஸ்டியன்...!

ஹரியாணா, தில்லி பொதுக்கூட்டங்களில் பிரதமர் மோடி இன்று பங்கேற்பு!

வெற்றிமாறன் தயாரிப்பில் கவின், ஆண்ட்ரியா!

திருப்பதியில் 24 மணி நேரம் காத்திருந்து சுவாமி தரிசனம்!

SCROLL FOR NEXT