முகப்பு
இந்தியா

5 ஆண்டுகளுக்கு முன் கொல்லப்பட்டவர்.. தில்லியில் உயிருடன் அதுவும்..

உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த 45 வயது நபர் கொலை செய்யப்பட்டதாக வழக்குப் பதியப்பட்ட நிலையில், தில்லியில் உயிரோடு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

Updated On : 7 பிப்ரவரி, 2024 at 3:22 PM
கோப்புப்படம்
பகிர்:


மீரட்: உத்தரப் பிரதேச மாநிலம் பக்பட் பகுதியைச் சேர்ந்த 45 வயது நபர் ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன நிலையில், கொலை செய்யப்பட்டதாக வழக்குப் பதியப்பட்ட நிலையில், தில்லியில் உயிரோடு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

அது மட்டுமல்லாமல், தில்லியில் கார் ஓட்டுநராக வேலை செய்யும் யோகேந்திர குமாருக்கு அங்கு மனைவி மற்றும் நான்கு பிள்ளைகள் இருப்பது காவல்துறையினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இது குறித்து காவல்துறையினர் கூறுகையில், பக்பத் பகுதியைச் சேர்ந்த யோகேந்திர குமார் மீது 2018ஆம் ஆண்டு குற்றவியல் வழக்கு ஒன்று பதிவு செய்யப்பட்டது. தொடர்ந்து விசாரணை நடைபெற்று வந்த நிலையில், அவர் காணாமல் போனார். அவரை அதே ஊரைச் சேர்ந்த பிரகாஷ் கொலை செய்திருக்கலாம்என்று அவரது சகோதரர்கள் குற்றம்சாட்டி, கொலை வழக்கும் பதிவு செய்யப்பட்டது. ஆனால், தொடர்ந்து தேடுதல் பணி நடந்தும், அவர் கொலை செய்யப்பட்டதற்கான ஆதாரங்கள் கிடைக்கவில்லை.

இந்த நிலையில், யோகேந்திர குமார் தில்லியில் கார் ஓட்டுநராக பணியாற்றுவதும், அவர் வேறோரு பெண்ணை திருமணம் செய்துகொண்டு அவர்களுக்கு நான்கு பிள்ளைகள் இருப்பதும் தெரிய வந்துள்ளது.

விசாரணையில், தனக்கு வேறொரு பெண்ணுடன் தொடர்பிருந்த நிலையில், வீட்டை விட்டு வெளியேறி தில்லி வந்து அந்தப் பெண்ணுடன் சேர்ந்து வாழ்ந்து வந்ததும், ஊரில் தான் கடத்திக் கொலை செய்யப்பட்டுவிட்டதாக குடும்பத்தார் கருதியதை தனக்கு சாதகமாக நினைத்து விட்டுவிட்டதாகவும் கூறியுள்ளார்.

இதற்கிடையே, பக்பத் பகுதியில் வசித்து வரும் யோகேந்திர குமாரின் முதல் மனைவி ரீடா, இதுவரை அவர் எங்களை வந்து சந்திக்கவோ, பேசவோ இல்லை. உண்மை என்னவென்பதை காவல்துறைதான் கண்டுபிடிக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.
 

முழு கட்டுரையைப் படிக்க →