இந்தியா

மனநலம் குன்றிய பெண்ணுக்குத் தொந்தரவு: தூய்மை பணியாளர் கைது

மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணிடம் தவறாக நடந்து கொள்ள முயன்றிருக்கிறார் மருத்துவமனையின் தூய்மை பணியாளர்.

DIN

22 வயதான மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணிடம் தவறாக நடந்து கொள்ள முயன்ற தூய்மை பணியாளர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது,

ராஜஸ்தானில் உள்ள மருத்துவ கல்லூரியின் மனநோய் பிரிவில் அனுமதிக்கப்படிருந்த பெண்ணிடம் அதே மருத்துவமனையில் தூய்மை பணியில் இருந்த நபர் தவறாக நடந்துகொள்ள முயன்றுள்ளார்.

அந்தப் பெண் இரவு 10.30 மணிபோல கழிவறைக்குச் சென்ற போது குற்றம் சாட்டப்பட்டவர் அங்கு தூய்மை பணியில் இருந்துள்ளார். 

பெண் சென்று நீண்ட நேரம் ஆகியும் வராததைக் கண்டு தாயும் அவரது சகோதரரும் கழிவறைக்குச் சென்று பார்க்கும்போது உள்புறமாகத் தாளிடப்பட்டிருந்தது.

கதவைத் திறந்துபோது குற்றம் சாட்டப்பட்டவர் பெண்ணைத் துன்புறுத்தவதைக் கண்ட அவர்கள் அந்த நபரைக் காவலர்களிடம் ஒப்படைத்துள்ளனர்.

அந்தப் பிரிவின் தலைமை மருத்துவர் இதுகுறித்து நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் இனி பெண் நோயாளிகள் இருக்கும் பிரிவுகளில் பெண் பணியாளர்கள் உடன் செல்லவும் ஆண் பணியாளர்கள் அந்த இடங்களில் இல்லையென்பதை உறுதி செய்யவும் அறிவுறுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

உன் அழகில் மயிலும் தோற்கும்... அனன்யா பாண்டே!

‘நலம் காக்கும் ஸ்டாலின்’ முகாம்கள் மூலம் இதுவரை 1.49 லட்சம் பேர் பயன்: முதல்வர் ஸ்டாலின்

ரஜினியைச் சந்தித்த சிம்ரன்! ஏன்?

அனில் அம்பானியால் எஸ்பிஐ-க்கு ரூ. 2,929 கோடி இழப்பு: சிபிஐ சோதனை முடிவு!

ஜன நாயகனில் புஸ்ஸி ஆனந்த்?

SCROLL FOR NEXT