இந்தியா

புதிதாக கல்யாணமான மகனின் முடிவு: தாயின் தற்கொலைக்குக் காரணமா?

அடுக்குமாடிக் குடியிருப்பின் 9-வது மாடியிலிருந்து தற்கொலை செய்துகொண்டுள்ளார் மூதாட்டி.

DIN

மூதாட்டி அடுக்குமாடிக் குடியிருப்பில் இருந்து ஜன்னல் வழியாக குதித்து தற்கொலை செய்துகொண்டுள்ளதாக வடக்கு மும்பை காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.

தகூர் கிராமத்துக்கு அருகே உள்ள சரோவா டவரில் இந்தச் சம்பவம் நிகழ்ந்துள்ளது.

இது குறித்து காவலர்கள் தெரிவித்தாவது:

“மங்களா பிரவீன் ரதோத், 60 வயதான மூதாட்டி அவரது கணவர் மற்றும் மூன்று பிள்ளைகள், மருமகள் உடன் வசித்து வந்துள்ளார். அவரது இளைய மகனுக்கு சமீபத்தில் திருமணம் நடைபெற்றுள்ளது.

“மகன், அவரது மனைவியுடன் மனைவியின் வீட்டுக்குச் செல்ல முடிவெடுத்துள்ளார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மங்களா பேசி வந்துள்ளார். இது சச்சரவாக 7 முதல் 8 மாதங்களாக நீடித்துள்ளது. இதனால் மன அழுத்தத்தில்அவர் இருந்ததால் அதற்கு சிகிச்சை மேற்கொண்டுவந்துள்ளார்.

வீட்டில் யாரும் இல்லாதபோது காலையில் அடுக்குமாடிக் குடியிருப்பின் 9-வது மாடியில் உள்ள வீட்டிலிருந்து  ஜன்னல் வழியாக அவர் குதித்ததாகவும்  மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போதும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாகவும் காவலர்கள் தெரிவித்தனர்.

இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.  

[தற்கொலை எண்ணங்களிலிருந்து விடுபடுவதற்கான ஆலோசனைகள் பெற தமிழக அரசு  நல்வாழ்வுத் துறை ஹெல்ப்லைன் – 104 மற்றும் சினேகா தற்கொலைத் தடுப்பு ஹெல்ப்லைன் – 044-24640050].

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ராகுல் காந்தி நாளை கூடலூர் வருகை!

ரஜினி - 173 புரோமோ இசையமைப்பாளர் இவரா?

அறிவியல் ஆயிரம்: செயற்கை மரபணுவைக் கண்டுபிடித்த ஹர் கோவிந்த் கொரானா!

பயணிக்கு உடல்நலக் குறைவு: ஜெய்ப்பூருக்கு திருப்பிவிடப்பட்ட ஏர் இந்தியா விமானம்

”காங்கிரஸ் செய்த துரோகம்! பராசக்தி படக்குழுவுக்கு வாழ்த்துகள்” அண்ணாமலை பேட்டி

SCROLL FOR NEXT