இந்தியா

இந்தியாவில் குறைந்து வரும் கரோனா பாதிப்பு!

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 475 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

DIN

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 475 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

புதிதாக 400-க்கும் அதிகமானோர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள போதிலும், கரனோவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை சிறிது குறைந்துள்ளதாக மத்திய நோய்க் கட்டுப்பாட்டு மையம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் நாட்டில் 6 பேர் பெருந்தொற்றுக்கு பலியாகியுள்ளனர். கர்நாடகத்தில் 3 பேர், சத்தீஸ்கரில் 2 பேர் மற்றும் அசாமில் ஒருவர் என கடந்த 24 மணி நேரத்தில் 6 பேர் உயிரிழந்துள்ளனர். 

நாட்டில் கரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 3,919 ஆக உள்ளது. பெருந்தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 4,44,81,893  ஆக உள்ளது. இதுவரை கரோனா பெருந்தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 5,33,402 ஆக உள்ளது. 

நாட்டில் 819 பேர் புதியவகை ஜெ.என்.1 வகை கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பட்டா நிலத்தில் மின் கம்பம் அகற்ற தாமதம்: மின்வாரிய அதிகாரிகளுக்கு நுகா்வோா் நீதிமன்றம் அபராதம் விதிப்பு

சங்ககிரியில் இன்றைய மின் தடை ரத்து

கண்ணாடி புட்டி வெடித்து முதியவா் உயிரிழப்பு

தருமபுரி மாவட்டத்தில் 81,515 வாக்காளா்கள் நீக்கம்

மாநகராட்சி ஆணையா் அலுவலகத்தை சாலையோர வியாபாரிகள் முற்றுகை

SCROLL FOR NEXT