இந்தியா

அயோத்தி ராமர் கோயிலுக்கு 2,400 கிலோ எடையுள்ள மணி நன்கொடை!

அயோத்தி ராமர் கோயிலுக்கு 2,400 கிலோ எடையுள்ள மணியைப் பக்தர்கள் நன்கொடையாக வழங்கியுள்ளனர். 

DIN

அயோத்தி ராமர் கோயிலுக்கு 2,400 கிலோ எடையுள்ள மணியைப் பக்தர்கள் நன்கொடையாக வழங்கியுள்ளனர். 

உத்தரப் பிரதேசத்தின், அயோத்தியில் கட்டப்பட்டுள்ள ராமர் கோயிலில் சிலை பிரதிஷ்டை விழா வரும் 22-ம் தேதி கோலாகலமாக நடைபெற உள்ளது. இந்த விழாவில் கலந்துகொள்ள பல்வேறு முக்கிய அரசியல் தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. 

இந்த நிலையில், உ.பி.யின் எட்டா மாவட்டத்தில் ஜலேசர் நகரத்தில் 2,400 கிலோ எடையுள்ள அஷ்டதாது(எட்டு உலோகங்கள்) கொண்ட ஒரு பெரிய மணியைப் பக்தர்கள் இணைந்து நன்கொடையாக வழங்கியுள்ளனர். இந்த மணி 25 லட்சம் செலவில் தயாரிக்கப்பட்டுள்ளது. 

பிரம்மாண்ட இந்த மணியின் ஓசை சுமார் 10 கி.மீ வரை கேட்கக்கூடிய திறனுடையதாக அமைக்கப்பட்டுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அடுத்த 3 மணி நேரத்துக்கு சென்னை, 27 மாவட்டங்களில் மழை!

புகாரை மறுத்திருந்தது இந்தியா! தேஜஸ் விழுந்து எரிய எண்ணெய்க் கசிவு காரணமா?

உலக அழகி ஆனார் மெக்சிகோவின் ஃபாத்திமா போஷ்!

மதுரை மெட்ரோ ரயில் திட்டம் அதிமுக ஆட்சியில் கொண்டு வரப்படும்: முன்னாள் அமைச்சர் செல்லூர்ராஜு

திருப்பம் தரும் தீர்த்தீஸ்வரர்

SCROLL FOR NEXT