இந்தியா

இந்திய வரலாற்றிலேயே சிறந்த பிரதமர் நரேந்திர மோடிதான்: முகேஷ் அம்பானி

DIN

குஜராத் மாநிலம், காந்திநகரில் 10-ஆவது ‘துடிப்புமிகு குஜராத் உலக வா்த்தக மாநாடு’ நடைபெற்று வருகிறது. இதில் கிழக்கு தைமூா் அதிபா் ஜோஸ் ரமோஸ் ஹோா்தா, ஐக்கிய அரபு அமீரக அதிபா் ஷேக் முகமது பின் சையது அல் நஹ்யா உள்பட பல்வேறு நாட்டு தலைவா்கள் பங்கேற்றனர்.

இந்த மாநாட்டில் கலந்து கொண்டுள்ள பல்வேறு நாடுகளைச் சேர்ந்த முன்னணி நிறுவனங்களின் தலைவர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி கலந்துரையாடுகிறார்.

மாநாட்டின் ஒரு பகுதியாக இடம்பெற்றுள்ள குஜராத் உலக வா்த்தகக் கண்காட்சியை பிரதமா் நரேந்திர மோடி திறந்துவைத்தாா். 

13 அறைகளைக் கொண்ட இந்தக் கண்காட்சியில் ஆஸ்திரேலியா, தான்சானியா, மொராக்கோ, தென்கொரியா, தாய்லாந்து, வங்கதேசம், சிங்கப்பூா், ஐக்கிய அரபு அமீரகம், பிரிட்டன், ஜொ்மனி, நாா்வே, ஃபின்லாந்து, நெதா்லாந்து, ரஷியா, ருவாண்டா, ஜப்பான், இந்தோனேசியா, வியத்நாம் உள்பட 20-க்கும் மேற்பட்ட நாடுகளைச் சோ்ந்த ஆயிரத்துக்கும் அதிகமான நிறுவனங்கள் தங்களுடைய ஆராய்ச்சிக் கண்டுபிடிப்புகள் மற்றும் தயாரிப்புகளை காட்சிப்படுத்தியுள்ளன.

இந்நிகழ்வில் பேசிய ரிலையன்ஸ் குழுமத் தலைவர் முகேஷ் அம்பானி,  “கடந்த 10 ஆண்டுகளில் ரிலையன்ஸ் நிறுவனம் இந்தியாவில் ரூ.12 லட்சம் கோடி முதலீடு செய்துள்ளது. இதில், மூன்றில் ஒரு பங்கு குஜராத்தில்தான் செய்யப்பட்டுள்ளது. சுற்றுச்சூழல் பாதிக்காத வகையில், ஜாம்நகரில் 5000 ஏக்கர் பரப்பளவில் ‘திருபாய் அம்பானி என்ர்ஜி கிகா காம்ப்ளக்ஸ்’ பெயரில் பசுமை ஆற்றல் எரிபொருள்கள் தயாரிக்கப்பட்டு பசுமை ஆற்றலில் இந்தியாவை சிறந்து விளங்கச் செய்வோம். நான் பெருமைமிகு குஜராத்தி. வெளிநாட்டினர் புதிய இந்தியாவைப் பற்றி நினைக்கும்போது புதிய குஜராத்தைப் பற்றியும் நினைப்பார்கள். எப்படி இந்த மாற்றம் நிகழ்ந்தது? நம் காலத்தின் தலை சிறந்த தலைவரும் இந்திய வரலாற்றில் மிகச் சிறந்த பிரதமருமான நரேந்திர மோடியால்தான். ரிலையன்ஸ் நிறுவனம் முன்பும், இனி எப்போதும் குஜராத் நிறுவனம்தான்” எனக் கூறியுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களவை தேர்தல்: ராமரின் பக்தர்களுக்கும் துரோகிகளுக்குமிடையேயான போர் -யோகி ஆதித்யநாத்

ஸ்காட்லாந்து அணி சீருடையில் கர்நாடகத்தின் ‘நந்தினி’ பால் நிறுவன குறியீடு

சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை: தமிழ்நாடு, கேரள அரசுகளுக்கு எடப்பாடி பழனிசாமி கண்டனம்

அதிமுகவில் இணைகிறாரா ஓபிஎஸ் ? - ஆர்.பி.உதயகுமார் விளக்கம்

பிறந்தநாள் வாழ்த்துகள் மடோனா செபாஸ்டியன்!

SCROLL FOR NEXT