சச்சின் பைலட் (கோப்புப்படம்) 
இந்தியா

ராமர் கோயிலை வைத்து அரசியல் செய்வது மிகவும் தவறானது: சச்சின் பைலட்

மத விவகாரமான ராமர் கோயிலை வைத்து அரசியல் செய்வது மிகவும் தவறானது என்று காங்கிரஸ் தலைவர் சச்சின் பைலட் தெரிவித்துள்ளார்.

DIN

மத விவகாரமான ராமர் கோயிலை வைத்து அரசியல் செய்வது மிகவும் தவறானது என்று காங்கிரஸ் தலைவர் சச்சின் பைலட் தெரிவித்துள்ளார்.

புதன்கிழமை செய்தியாளர்களிடம் பேசிய அவர், “நான் ராமர் கோயிலுக்கு செல்வதற்கு எனக்கு யாரும் அழைப்பு விடுக்க வேண்டிய அவசியமில்லை. எனக்கு எப்போது தோன்றுகிறதோ அப்போது கோயிலுக்கு சென்று வழிபடுவேன்.

இது நம்பிக்கை தொடர்பானது. மதம் தொடர்புடைய உணர்ச்சிகரமான ராமர் கோயில் விவகாரத்தை வைத்து அரசியல் செய்வது மிகவும் தவறானதாகும். 

அரசியல் செய்ய வேண்டுமானால் பொருளாதாரம், விலைவாசி உயர்வு, விவசாயம், வறுமை போன்ற விவகாரங்களைக் கையில் எடுக்க வேண்டும். சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை பல மடங்கு குறைந்துள்ளது. இருப்பினும் இந்திய அரசு பெட்ரோல், டீசல் விலையை குறைக்க மறுக்கிறது.” என்று தெரிவித்தார். 

உத்தரப் பிரதேசத்தின் அயோத்தியில் கட்டப்பட்டுள்ள ராமர் கோயிலின் திறப்பு விழா வரும் 22-ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்த விழாவில் பங்கேற்குமாறு காங்கிரஸ் தலைவர்கள் சோனியா காந்தி, மல்லிகார்ஜுன கார்கே, ஆதிர் ரஞ்சன் சௌத்ரி உள்ளிட்ட தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. 

இருப்பினும் இந்த விழாவில் காங்கிரஸ் தலைவர்களின் வருகை இன்னும் உறுதி செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

காதல் சடுகுடு... அனுபமா பரமேஸ்வரன்!

காதல் சடுகுடு... அனுபமா பரமேஸ்வரன்!

மாஸ்கோவில் ரஷிய வெளியுறவு அமைச்சருடன் ஜெய்சங்கர் நாளை சந்திப்பு!

வசந்தமாய் வந்தவள்... வெண்பா!

சிரிப்பில் சிவக்கிறேன்... அனன்யா!

SCROLL FOR NEXT