மம்தா பானர்ஜி (கோப்புப்படம்) 
இந்தியா

'ஒரே நாடு, ஒரே தேர்தல்' திட்டம் கூட்டாட்சிக்கு உகந்ததல்ல: மம்தா பானர்ஜி 

இந்தியாவின் கூட்டாட்சி அமைப்புக்கு 'ஒரே நாடு, ஒரே தேர்தல்' என்ற முறை உகந்ததல்ல என்று மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.

DIN

இந்தியாவின் கூட்டாட்சி அமைப்புக்கு  'ஒரே நாடு, ஒரே தேர்தல்' என்ற முறை உகந்ததல்ல என்று மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.

மக்களவை மற்றும் மாநில சட்டப்பேரவைகளுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவதற்கான 'ஒரே நாடு, ஒரே தேர்தல்' திட்டத்தை அமல்படுத்துவதற்கான சாத்தியக்கூறு குறித்து ஆய்வு செய்வதற்காக முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையில் உயர்நிலைக் குழுவை மத்திய அரசு கடந்த ஆண்டு செப்டம்பரில் அமைத்தது.

அக்குழுவின் செயலர் நிதின் சந்திராவுக்கு கடிதம் இன்று (வியாழக்கிழமை) மேற்கு வங்க முதல்வரும், திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் தலைவருமான மம்தா பானர்ஜி கடிதம் அனுப்பினார்.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய மம்தா பானர்ஜி, “ஒரே நாடு, ஒரே தேர்தல் திட்டம் ஏற்புடையது அல்ல. இந்தியாவின் கூட்டாட்சி அமைப்புக்கு இந்த முறை உகந்தது கிடையாது.

இந்த விஷயத்தில் ஆராய்ந்து செயல்படுமாறு இந்திய தேர்தல் ஆணையத்திடமும், உயர்நிலைக் குழுவிடமும் கோரிக்கை வைக்க உள்ளேன். 

இது எங்களின் குரல் மட்டுமல்ல, இந்தியாவின் குரல் ஆகும். இந்த விவகாரத்தில் நமது மாநிலத்தின் கொள்கை, கூட்டாட்சி அமைப்பு முறை அனைத்தையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டிய அவசியம் உள்ளது.” என்று தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

யார் இந்த மத் டெய்ட்கே? 24 வயது செய்யறிவு ஆய்வாளர்! ரூ.2,000 கோடி சம்பளம்!!

அவதூறு வழக்கு: சிறப்பு நீதிமன்றத்தில் ராகுல் ஆஜர்!

10 கோடி பார்வைகளைப் பெற்ற கனிமா!

லாக்-அப் மரணம் அல்ல! கோவை காவல் நிலையத்தில் ஒருவர் மர்ம மரணம்! நடந்தது என்ன?

தொடர்ந்து 2-ம் நாளாக சரிவில் பங்குச் சந்தை!

SCROLL FOR NEXT