அயோத்தி எங்களின் நம்பிக்கைக்குரிய விஷயம்: காங். தலைவர்
அயோத்தி ராமர் கோவிலுக்கு ஒட்டுமொத்த காங்கிரஸ் கட்சியும் செல்லும் என அக்கட்சியின் மூத்த தலைவர் பிரமோத் திவாரி தெரிவித்துள்ளார்.
உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியில் ராமர் கோயில் சிலை பிரதிஷ்டை ஜனவரி 22-ம் தேதி கோலாகலமாக நடைபெற உள்ளது. பிரதிஷ்டை விழாவில் பங்கேற்க பல்வேறு முக்கிய தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
முக்கியமாக, சோனியா காந்தி உள்பட காங்கிரஸ் தலைவர்களுக்கு அழைப்பிதழ் அனுப்பட்டது. ஆனால், இந்நிகழ்வைக் காங்கிரஸ் புறக்கணிப்பதாக அறிவித்துள்ளது.
இதையும் படிக்க: அயோத்தியில் ரூ.14.5 கோடிக்கு நிலம் வாங்கிய அமிதாப் பச்சன்!
இந்நிலையில், மாநிலங்களவை எதிர்க்கட்சித் துணை தலைவரும் காங்கிரஸ் எம்.பி.யுமான பிரமோத் திவாரி, “அயோத்தி ராமர் கோவிலுக்கு அழைப்பிதழ் கொடுக்க இவர்கள் (பாஜக) யார்? அயோத்தி எங்களுக்கு நம்பிக்கைக்குரிய விஷயம். அழைப்பிதழ் இல்லாமலே ஒட்டுமொத்த காங்கிரஸும் அயோத்தி செல்லும்” எனக் கூறியுள்ளார்.
இக்கருத்து சமூக வலைதளங்களில் சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது.