இந்தியா

குஜராத்தில் பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் இருமடங்காக அதிகரிப்பு! 

DIN

மத்திய அரசின் புள்ளிவிவரங்களின்படி, கடந்த ஐந்து ஆண்டுகளில் குஜராத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் இரண்டு மடங்காக அதிகரித்துள்ளது.

குஜராத் மாநிலத்தில் கடந்த ஐந்தாண்டுகளில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன.

அரசு புள்ளிவிவரங்களின்படி, கடந்த ஐந்தாண்டுகளில் தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் 2,294 புகார்களையும், தேசிய மகளிர் ஆணையம் 2,271 புகார்களையும் குஜராத்தில் இருந்து மட்டும் பெற்றுள்ளன.

மாநிலங்களவையில் இதுகுறித்த கேள்விக்கு பதிலளித்த பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம், என்சிபிசிஆர் அமைப்புக்கு குஜராத்தில் மட்டும் 2018-19 ஆம் ஆண்டில் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பான 77 புகார்கள் வந்ததாகக் கூறியது;

மேலும் 2019-20ல் 1,478; 2020-21ல் 42; 2021-22ல் 279; மற்றும் 2022-23ல் 418 என மொத்தமாக ஐந்து ஆண்டுகளில் 2,294 புகார்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இது 2018-19 முன்பிருந்ததை விட இருமடங்கு அதிகமாகும்.

அதே போல மாநிலங்களவையில் அரசாங்கம் வழங்கிய புள்ளிவிவரங்களின்படி, தேசிய மகளிர் ஆணையம் குஜராத்தில் மட்டும் 2018 இல் 247 பெண்கள் மீதான வன்கொடுமை வழக்குகளை பதிவு செய்துள்ளது. 2019ஆம் ஆண்டில் 298; 2020இல் 393; 2021இல் 458; 2022இல் 415; 2023 நவம்பர் 30ஆம் தேதி வரை பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள் தொடர்பாக 460 புகார்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

குஜராத்தில் பூபேந்திரபாய்  படேல் தலைமையிலான பாஜக ஆட்சி நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பீன்ஸ் கிலோ ரூ.200

உத்திரகாவிரி ஆற்றில் வெள்ளம்: ஒரே இரவில் நிரம்பிய தடுப்பணை

என்எம்சி தலைவா் பெயரில் போலி அழைப்புகள்!

ஜம்மு-காஷ்மீா் பயங்கரவாதத் தாக்குதல்: ஆளுநா் கண்டனம்; பாஜக போராட்டம்

பட்டாக் கத்தியுடன் சுற்றித் திரிந்த 5 போ் கைது

SCROLL FOR NEXT