மம்தா பானர்ஜி (கோப்புப்படம்) 
இந்தியா

ஜனவரி 22ஆம் தேதி மத நல்லிணக்கப் பேரணி: மம்தா பானர்ஜி அறிவிப்பு!

ஜனவரி 22-ஆம் தேதி மத நல்லிணக்கப் பேரணி நடத்தப்படும் என்று மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி அறிவித்துள்ளார்.

DIN

ஜனவரி 22-ஆம் தேதி மத நல்லிணக்கப் பேரணி நடத்தப்படும் என்று மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி அறிவித்துள்ளார்.

மேற்கு வங்க முதல்வரும், திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் தலைவருமான மம்தா பானர்ஜி செவ்வாய்க்கிழமை செய்தியாளர்களிடம் கூறியதாவது, “ஜனவரி 22-ஆம் தேதி நான் ஒரு பேரணி நடத்தவுள்ளேன். 

காளி கோயிலில் பிரார்த்தனை நடத்தியபின், அங்கிருந்து இந்தப் பேரணி தொடங்கப்படும். அதையடுத்து ஹசரா முதல் பூங்கா விளையாட்டு மைதானம் வரை இந்த மத நல்லிணக்கப் பேரணி சென்று அங்கு கூட்டம் நடத்தப்படும். நாம் செல்லும் வழியில் உள்ள மசூதிகள், தேவாலயங்கள், குருத்வாராக்கள் மற்றும் கோயில்களில் வழிபாடுகள் நடத்தப்படும்.

இந்தப் பேரணியில் பங்கேற்பதற்கு அனைவரையும் வரவேற்கிறேன். அதே நாளில் பிற்பகல் 3 மணியளவில் எனது கட்சித் தொண்டர்கள் அனைத்து மாவட்டங்களிலும் பேரணி நடத்துவார்கள்.” என்று தெரிவித்தார்.

உத்தரப் பிரதேசத்தின் அயோத்தியில் கட்டப்பட்டு வரும் ராமர் கோயில் சிலை பிரதிஷ்டை நிகழ்வும் ஜனவரி 22-ம் தேதி நடைபெற உள்ளது.

ராமர் கோயில் கட்டுமானப் பணிகள் நிறைவடையாமல், சிலை பிரதிஷ்டை நடத்த திட்டமிட்டுள்ளதால் சங்கராச்சாரியார்கள் இந்நிகழ்வினைப் புறக்கணித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மஞ்சணத்தி என்றால் என்ன? மாரி செல்வராஜ் விளக்கம்!

அந்தி மாலை நேரம்... சரண்யா துராடி!

வண்ண மானே... ஸ்வேதா!

தங்கச் சிலை... சப்தமி கௌட!

இவ்வளவு பெரிய படத்தில் இதைக் கவனிக்கவில்லையா?

SCROLL FOR NEXT