முகப்பு
இந்தியா

ஜார்க்கண்டில் எக்ஸ்பிரஸ் ரயில் மோதியதில் 4 பேர் பலி

ஜார்க்கண்டில் எக்ஸ்பிரஸ் ரயில் மோதியதில் 4 பேர் சம்பவ இடத்திலேயே பலியானார்கள். 

Updated On : 19 ஜனவரி, 2024 at 6:10 PM
கோப்புப் படம்.
பகிர்:

ஜார்க்கண்டில் எக்ஸ்பிரஸ் ரயில் மோதியதில் 4 பேர் சம்பவ இடத்திலேயே பலியானார்கள். 

ஜார்க்கண்ட் மாநிலம், கிழக்கு சிங்பூமில் உள்ள கம்ஹாரியா ரயில் நிலையம் அருகே வியாழக்கிழமை இரவு 7 மணியளவில் ரயில்வே தண்டவாளத்தை கடக்க முயன்ற 4 பேர் மீது அந்த வழியாக வந்த கலிங்கா உத்கல் எக்ஸ்பிரஸ் மோதியது. இதில் 4 பேர் சம்பவ இடத்திலேயே பலியானார்கள். 

மேலும் உடல்கள் மோசமான நிலையில் காணப்பட்டதாக டாடாநகர் சந்திப்பு கண்காணிப்பாளர் அபிஷேக் சிங்கால் தெரிவித்தார். இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது, நடை மேம்பாலத்தை பயன்படுத்தாமல் தண்டவாளத்தை கடக்க முயன்றதால் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. தண்டவாளத்தை கடக்கும் போது பொதுமக்கள் எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும். 

Advertisement

பலியானவர்களில் 2 பேரின் உடல்கள் மட்டும் அடையாளம் காணப்பட்டுள்ளது. மற்ற இரண்டு உடல்கள் இன்னும் அடையாளம் காணப்படவில்லை. இதுவரை யாரும் உடல்களுக்கு உரிமை கோரவில்லை. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.