முகப்பு
இந்தியா

அயோத்தியில் உலகின் மிகப்பெரிய எண்ணெய் விளக்கு!

உலகின் மிகப்பெரிய எண்ணெய் விளக்கு அயோத்தியில் உள்ள ராமர் கோயிலில் ஜனவரி 22 ஏற்றப்படவுள்ளது. 

Updated On : 7 பிப்ரவரி, 2024 at 3:17 PM
அயோத்தியில் உள்ள ராமர் கோயில்
பகிர்:

உலகின் மிகப்பெரிய எண்ணெய் விளக்கு அயோத்தியில் உள்ள ராமர் கோயிலில் வரும் ஜனவரி 22 ஏற்றப்படவுள்ளது. ராமர் கோயில் திறப்பு விழா அன்று மாலை 5 மணிக்கு இந்த விளக்கு ஏற்றப்படும் என  ஜகத்குரு பரமான்ச ஆச்சாரியா தெரிவித்துள்ளார். 

இந்த விளக்கிற்கு 1.25 குவிண்டால் அளவிலான பட்டுத்திரியும், 21,000 லிட்டர் எண்ணெயும் பயன்படுத்தப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். நாட்டின் பல்வேறு இடங்களிலிருந்து கொண்டுவரப்பட்ட மண், நீர் மற்றும் மாட்டுப்பாலில் தயாரிக்கப்பட்ட நெய்யும் கொண்டு இந்த விளக்கு உருவாக்கப்பட்டுள்ளது. 

இந்த விளக்கை 108 குழுக்கள் இணைந்து ஒரு வருடம் உழைத்து உருவாக்கியுள்ளதாக ஜகத்குரு பரமான்ச ஆச்சாரியா தெரிவித்துள்ளார். இதை உருவாக்குவது எளிதான விஷயமல்ல எனவும் கூறினார்.

இந்த விளக்கிற்கு பயன்படுத்தப்படும் எண்ணெய், சீதாவின் தாய்நாட்டில் இருந்து கொண்டுவரப்பட்டுள்ளது எனவும் தெரிவித்துள்ளார். 

பிரம்மாண்டமான ராமர் கோயிலின் திறப்புவிழா வரும் ஜனவரி 22 நடைபெறவுள்ள நிலையில், பல்வேறு பிரபலங்களுக்கும், அரசியல் கட்சித் தலைவர்களுக்கும் அழைப்பு விடப்பட்டிருந்தது. 

பாஜக இந்த நிகழ்ச்சியை அரசியல் பிரதிபலன்களுக்காகச் செய்வதாக குற்றம் சாட்டி, மல்லிகார்ஜூன் கார்கே, சோனியா காந்தி, சீதாராம் யெச்சூரி போன்ற அரசியல் கட்சித் தலைவர்கள் இந்த அழைப்பை ஏற்க மறுத்துள்ளனர். நான்கு சங்கராச்சாரியார்களும் இந்த திறப்பு விழா அழைப்பை நிராகரித்திருப்பது குறிப்பிடத்தக்கது. 

முழு கட்டுரையைப் படிக்க →