இந்தியா

பாஜக பிரமுகர் கொலைவழக்கில் பிஎஃப்ஐ அமைப்பைச் சேர்ந்தவர்கள் குற்றவாளிகள் என தீர்ப்பு!

DIN

கேரள மாநில பாஜக பிரமுகரின் கொலை வழக்கில் தொடர்புடைய பிஎப்ஐ அமைப்பைச் சேர்ந்தவர்கள் குற்றவாளிகள் என தீர்ப்பு வழங்கியது நீதிமன்றம்.

2021 டிசம்பரில் கேரள மாநில பாஜக ஓபிசி பிரிவு தலைவர் கொல்லப்பட்ட வழக்கில் 15 பேரை குற்றவாளிகள் என்று சனிக்கிழமை தீர்ப்பளித்தது கேரள நீதிமன்றம்.

குற்றவாளிகள் என்று அறிவிக்கப்பட்டவர்கள் தற்போது தடைசெய்யப்பட்டுள்ள பாப்புலர் ஃப்ரண்ட் ஆப் இந்தியா அமைப்பினைச் சேர்ந்தவர்கள் ஆவர். 

கேரள மாநில ஓபிசி பிரிவின் தலைவராக இருந்த ரஞ்சித் ஸ்ரீனிவாசன் என்பவர் 2021 டிச.19ஆம் தேதி அவரது குடும்பத்தினர் முன்னே கொல்லப்பட்டார்.

இந்த சம்பவம் தொடர்பான வழக்கு மவேலிக்கரா நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்நிலையில் கூடுதல் மாவட்ட நீதிபதி வி.ஜி.ஸ்ரீதேவி இந்த வழக்கின் தீர்ப்பினை வழங்கினார். மேலும் இவர்களுக்கான தண்டனை விவரங்கள் திங்கள்கிழமை அறிவிக்கப்பட உள்ளது.

குற்றம் சாட்டப்பட்ட 15 பேரில் எட்டு பேர் நேரடியாக இந்த கொலை சம்பவத்தில் ஈடுபட்டுள்ளனர். மற்றவர்கள் இதில் மறைமுகமாக சம்மந்தப்பட்டுள்ளனர் என்று அரசு தரப்பு வழக்கறிஞர் குற்றம் சாட்டினார். 

இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதி இந்த சம்பவத்தில் தொடர்புடைய 15 பேரையும் குற்றவாளிகள் என்று தீர்ப்பளித்தார். 

இதனையடுத்து உயிரிழந்த பாஜக பிரமுகர் ஸ்ரீனிவாசனின் குடும்பத்தினர் குற்றவாளிகளுக்கு அதிகபட்ச தண்டனை வழங்கப்படும் என்று எதிர்பார்ப்பதாக நம்பிக்கை தெரிவித்துள்ளனர். 

2021 டிச.18ம் தேதி எஸ்டிபிஐ தலைவர் கே.எஸ்.ஷான் ஒரு கும்பலால் கொலை செய்யப்பட்டார். அவர் கொல்லப்பட்ட சில மணி நேரங்களிலேயே பாஜக நிர்வாகி ஸ்ரீனிவாசனும் கொல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மீண்டும் விஜய் தேவரகொண்டாவுடன் நடிக்கும் ராஷ்மிகா?

சென்னையிலிருந்து சர்வதேச விண்வெளி மையத்தை வெறும் கண்களால் பார்க்கலாம்: நாசா

10 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள்: திருவள்ளூர் மாவட்டத்தின் தேர்ச்சி விகிதம்?

திருச்சியில் 95.23% தேர்ச்சி: மாநில அளவில் 5ம் இடம்!

இலங்கையில் திவ்யபாரதி..!

SCROLL FOR NEXT