முகப்பு
இந்தியா

மும்பையில் 22 மாடிக் கட்டத்தில் பயங்கர தீ விபத்து!

மகாராஷ்டிரத்தின் மும்பையின் மலாட் பகுதியில் உள்ள 22 மாடிக் கட்டடத்தில் சனிக்கிழமை பிற்பகல் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.

Updated On : 7 பிப்ரவரி, 2024 at 3:17 PM
பகிர்:

மகாராஷ்டிரத்தின் மும்பையின் மலாட் பகுதியில் உள்ள 22 மாடிக் கட்டடத்தில் சனிக்கிழமை பிற்பகல் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.

அதிகாரிகளின் கூற்றுப்படி, 

குடிசை மறுவாழ்வு ஆணையத்தின் (எஸ்ஆர்ஏ) கட்டடம் மலாட்டின் குரார் கிராமப் பகுதியில் அமைந்துள்ளது. இங்கு 22 மாடிக் கட்டத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. 

இந்த தீ விபத்தால் யாருக்கும் உயிர்ச் சேதமோ, காயமோ ஏற்படவில்லை என அதிகாரிகள் தெரிவித்தனர்.

தீ விபத்து குறித்து தகவல் கிடைத்ததும் 5 பேர் கொண்ட தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டு தீயைக் கட்டுக்குள் கொண்டுவரும் பணியில் ஈடுபட்டனர்.

தீயணைப்பு படையினர் நிலைமையைக் கட்டுக்குள் கொண்டுவரும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். இதுகுறித்து போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.