முகப்பு
இந்தியா

அயோத்தி வந்தடைந்தார் பிரதமர் மோடி! 

அயோத்தி ராமர் கோயிலில் சிலை பிரதிஷ்டையை முன்னிட்டு அயோத்தி வந்தடைந்தார் பிரதமர் மோடி. 

Updated On : 7 பிப்ரவரி, 2024 at 3:16 PM
அயோத்தியில் பிரதமர் மோடி
பகிர்:

அயோத்தி ராமர் கோயிலில் சிலை பிரதிஷ்டையை முன்னிட்டு அயோத்தி வந்தடைந்தார் பிரதமர் மோடி. 

மகரிஷி வல்மீகி சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கிய பிரதமர் மோடி, ராமர் கோயிலுக்குச் சென்று அங்கு பிரான் பிரதிஷ்டையில் பங்கேற்கிறார். 

அயோத்தியில் ராமா் கோயில் கருவறையில் மூலவா் ஸ்ரீ பால ராமா் சிலை பிரானப் பிரதிஷ்டை இன்று 12.00 மணிக்கு நடைபெறுகிறது.

சிலை பிரதிஷ்டை விழாவில் நாட்டின் முக்கியப் பிரமுகா்கள் உள்ளிட்ட 7,000-க்கும் மேற்பட்டோர் இந்நிகழ்வில் பங்கேற்க உள்ளனா்.

அயோத்தி நகரமே விழாக் கோலம் பூண்டுள்ளது. பாதுகாப்புக்காக நகரம் முழுவதும் 10 ஆயிரம் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.

பிரதிஷ்டை விழாவுக்குப் பிறகு குபேர் திலாவுக்குச் செல்லும் பிரதமர் கோயில் கட்டுமானத்துடன் தொடர்புடைய தொழிலாளர்களுடன் உரையாட உள்ளார். 

முழு கட்டுரையைப் படிக்க →