முகப்பு
இந்தியா

உ.பி.யில் இன்று 24 மணி நேரமும் தடையில்லா மின்சாரம்

அயோத்தியில் ராமர் கோயில் திறப்பு விழாவையொட்டி உ.பி.யில் இன்று 24 மணி நேரமும் தடையில்லா மின்சாரம் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Updated On : 7 பிப்ரவரி, 2024 at 3:16 PM
பகிர்:

அயோத்தியில் ராமர் கோயில் திறப்பு விழாவையொட்டி உ.பி.யில் இன்று 24 மணி நேரமும் தடையில்லா மின்சாரம் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

உத்தர பிரதேசம் மாநிலம், அயோத்தி ராமஜென்ம பூமியில் பிரம்மாண்டமாக கட்டப்பட்டுள்ள ஸ்ரீராமா் கோயிலில் மூலவா் ஸ்ரீபால ராமா் (ராம் லல்லா) சிலை திங்கள்கிழமை (ஜன.22) பிராணப் பிரதிஷ்டை செய்யப்பட உள்ளது. இவ்விழாவில் பிரதமா் நரேந்திர மோடி மற்றும் சிறப்பு அழைப்பாளா்கள் பங்கேற்றுள்ளனர். இதையொட்டி, மலா்களாலும் வண்ண விளக்குகளாலும் அலங்கரிக்கப்பட்டு திருவிழாக்கோலம் பூண்டுள்ள அயோத்தி நகரம், நாடே எதிா்நோக்கும் பெரும் நிகழ்வுக்காக தயாா் நிலையில் உள்ளது.

பிரதமா் மோடி உள்பட நாட்டின் முக்கியப் பிரமுகா்கள் சிலை பிரதிஷ்டையில் பங்கேற்றுள்ளதால், மத்திய படையினருடன் இணைந்து உத்தர பிரதேச மாநில காவல் துறையினா் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொண்டுள்ளனா். பிரதிஷ்டையைத் தொடா்ந்து, செவ்வாய்க்கிழமை முதல் கோயிலில் பொதுமக்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட உள்ளனா். இந்த நிலையில் அயோத்தியில் ராமர் கோயில் திறப்பு விழாவையொட்டி உ.பி.யில் இன்று 24 மணி நேரமும் தடையில்லா மின்சாரம் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதுதொடர்பாக மிகுந்த எச்சரிக்கையுடன் செயல்படுமாறு துறை அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இதற்கிடையில்,அயோத்தி மாவட்டம் முழுவதும் ஜனவரி 24 வரை தடையில்லா மின்சாரம் வழங்கப்படும் என்று டிஸ்காம் தெரிவித்துள்ளது.
 

முழு கட்டுரையைப் படிக்க →