நேதாஜி சுபாஸ் சந்திர போசுக்கு அஞ்சலி செலுத்தும் ராகுல் காந்தி. 
இந்தியா

நேதாஜிக்கு அஞ்சலி செலுத்திய ராகுல் காந்தி!

நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் 127 ஆவது பிறந்த நாளில் அவரது புகைப்படத்திற்கு ராகுல் காந்தி மலர் தூவி அஞ்சலி செலுத்தினார். 

DIN

நேதாஜி சுபாஷ் சந்திர போஸுக்கு அவரது பிறந்தநாளன்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி அவருக்கு அஞ்சலி செலுத்தியுள்ளார். இந்தியாவின் பன்முகத்தன்மை மற்றும் சகிப்புத்தன்மையின் மிகச் சிறந்த உதாரணம் அவர்தான் என ராகுல் கூறியுள்ளார். 

பாரத ஜோடோ நியாய யாத்திரை மேகாலயாவை அடைந்துள்ள நிலையில், சுபாஷ் சந்திர போஸின் பிறந்த நாளன்று, அங்கு தங்கியிருக்கும் முகாமிலேயே புகைப்படத்திற்கு மலர்கள் தூவி ராகுல் காந்தி அஞ்சலி செலுத்தியுள்ளார். 

தனது எக்ஸ் தளப்பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், 'நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் 127ஆவது பிறந்தநாளில் அவருக்கு எங்களது மனமார்ந்த அஞ்சலியைத் தெரிவித்துக்கொள்கிறோம். காந்தி, நேரு, அசாத், சுபாஷ், ஜான்சி ராணியின் படைப்பிரிவோடு சேர்த்து சுபாஷ் சந்திர போஸின் இந்திய தேசிய ராணுவப் படையும் இந்திய சுதந்திரப் போராட்டத்தில் முக்கியமான பங்கை வகிக்கிறது. 

இந்தியாவின் பன்முகத்தன்மை, சமூக பொருளாதார நீதி, சகிப்புத்தன்மை மற்றும் அனைத்து பாலினத்தையும் உள்ளடக்குதல் ஆகியவற்றிற்கு அவர் மிகச் சிறந்த உதாரணம். ஜெய் ஜிந்த்' என அவர் தெரிவித்துள்ளார். 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மண்டல அளவிலான கால்பந்துப் போட்டி: ஸ்ரீஅம்மன் கலை அறிவியல் கல்லூரி முதலிடம்

கா்ப்பிணிகளுக்கு ஊட்டச்சத்து பெட்டகம்: அமைச்சா் பி.கே.சேகா் பாபு வழங்கினாா்

ஜூடோ போட்டிகளில் பதக்கங்கள் குவித்த அரசுப் பள்ளி மாணவா்கள்: மாநகராட்சி ஆணையரிடம் வாழ்த்து

விஸ்வகா்மா ஜெயந்தி கொண்டாட்டம்

ஓவேலி மலைத்தொடரில் பூத்துக்குலுங்கும் குறிஞ்சி மலா்கள்

SCROLL FOR NEXT