ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்ட ஐஏஎஸ் அதிகாரி பிரேம்சுக் பிஷ்னோயை இடைநீக்கம் செய்து ராஜஸ்தான் அரசு உத்தரவிட்டுள்ளது.
லஞ்சம் வாங்கும்போது கையும் களவுமாக பிடிபட்ட ஐஏஎஸ் அதிகாரி பிரேம்சுக் பிஷ்னோய் என்பவரை ராஜஸ்தான் அரசு இன்று (ஜன.23) இடைநீக்கம் செய்து உத்தரவிட்டது.
இதையும் படிக்க | அயோத்தியில் தடுப்புகளை உடைத்தெறிந்து அத்துமீறிய மக்கள் கூட்டம்!
ஊழல் தடுப்பு பிரிவால் பிஷ்னோய் கைது செய்யப்பட்ட ஜன.19ம் தேதி முதலே இடைநீக்கம் அமலுக்கு வருவதாக முன்தேதியிட்டு இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
ராஜஸ்தான் மாநிலப் பணியாளர் நலத்துறை அமைச்சகம் அவரை இடைநீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளது.
இடைநீக்கம் செய்யப்பட்டுள்ள பிரேம் சுக் பிஷ்னோய் ராஜஸ்தான் மாநிலத் தலைநகர் ஜெய்ப்பூரில் மீன்வளத்துறை இயக்குநராகப் பதவி வகித்து வந்தார்.
கடந்த வெள்ளிக்கிழமை மீன் பிடிப்பதற்கான உரிமம் வழங்குவதற்கு லஞ்சம் பெற்றபோது அவர் ஊழல் தடுப்புப் பிரிவால் கைது செய்யப்பட்டார்.
இதையும் படிக்க | அயோத்தி செல்வதைப் பக்தர்கள் தவிர்க்க வேண்டும்: காவல்துறை வேண்டுகோள்!
ராஜஸ்தானில் பஜன்லால் சர்மா தலைமையிலான பாஜக அரசு நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.