இந்தியா

பெங்களூருவில் பள்ளிக்குச் சென்ற சிறுமிக்கு நேர்ந்த சோகம்!

பெங்களூரூவில் பள்ளிக் கட்டடத்தின் மூன்றாவது தளத்திலிருந்து 4 வயது சிறுமி தவறி விழுந்து பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

DIN

பெங்களூரூவில் பள்ளிக் கட்டடத்தின் மூன்றாவது தளத்திலிருந்து 4 வயது சிறுமி தவறி விழுந்து பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

செல்லகெரே பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் பிரிகேஜி படித்துவந்த 4 வயது சிறுமி ஜியானா பள்ளியில் விளையாடிக்கொண்டிருந்தபோது நிலை தடுமாறி 3வது மாடியிலிருந்து தவறி விழுந்து உயிரிழந்தாள். 

இந்த சம்பவம் நடந்ததன் உண்மை என்ன என்பதை போலீஸார் விசாரித்து வருகின்றனர். சிறுமி கீழே விழுந்ததும் வாந்தி எடுத்துள்ளார். இதையடுத்து சிறுமி அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிறுமி ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். 

பள்ளியின் அலட்சியமே சிறுமி இறப்பதற்கு காரணம் என சிறுமியின் தந்தை குற்றம் சாட்டியுள்ளார். திறமையான குழந்தையான ஜியானா இளம் வயதிலேயே பாடல் பாடுவது, ஓவியம் வரைவதில் மிகுந்த ஆர்வம் கொண்டவர் என்று அவரது தந்தை தெரிவித்துள்ளார். 

இது தொடர்பாக பள்ளி மற்றும் முதல்வர் மீது வழக்குப் பதிவு செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பழைய ஒப்பந்ததாரா்களுக்கு கடைகள் ஒதுக்கீடு: ஆற்காடு நகா்மன்றத் தலைவா்

பொதுத்தோ்வில் மாணவா்கள் தோ்ச்சி பெற பாலா பீடத்தில் சிறப்பு வழிபாடு

அரக்கோணம் அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளியில் ரூ.1.90 கோடியில் புதிய கட்டடம் திறப்பு

ரூ.200.66 கோடியில் புனரமைக்கப்பட்ட பாலாறு அணைக்கட்டு: முதல்வா் திறந்து வைத்தாா்

குழப்பங்கள் நீங்கும் தனுசு ராசிக்கு: தினப்பலன்கள்!

SCROLL FOR NEXT