இந்தியா கூட்டணியின் பின்னடைவுக்கு காங்கிரஸ் கட்சியே பொறுப்பு: கே.சி.தியாகி
இந்தியா கூட்டணியின் விரிசலுக்கு காங்கிரஸ் கட்சியே பொறுப்பாகும் என்று ஐக்கிய ஜனதா தளம் கட்சியைச் சேர்ந்த தலைவர் கே.சி.தியாகி கூறியுள்ளார்.
இந்தியா கூட்டணியின் விரிசலுக்கு காங்கிரஸ் கட்சியே பொறுப்பாகும் என்று ஐக்கிய ஜனதா தளம் கட்சியைச் சேர்ந்த தலைவர் கே.சி.தியாகி கூறியுள்ளார்.
இன்னும் ஓரிரு மாதங்களில் மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ளது. இதில் ஆளும் பாஜக கூட்டணிக்கு எதிராக காங்கிரஸ், திமுக, ஆம் ஆத்மி உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் இணைந்து இந்தியா என்ற பெயரில் கூட்டணி அமைத்துள்ளன.
இதையும் படிக்க | வாய்ப்பை நழுவவிடாதீர்கள்...போட்டித் தேர்வுகளுக்கு அரசு இலவச பயிற்சிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு!
Advertisement
Advertisement
இந்தியா கூட்டணியில் இடம்பெற்றுள்ள திரிணமூல் காங்கிரஸ் கட்சித் தலைவர் மம்தா பானர்ஜி மேற்குவங்கத்தில் தனித்துப் போட்டியிடுவதாக சமீபத்தில் அறிவித்தார்.
பஞ்சாப் மற்றும் ஹரியாணா மாநிலங்களில் ஆம் ஆத்மி கட்சி தனித்துப் போட்டியிட உள்ளதாக அக்கட்சி தலைவர்கள் சிலர் கூறி வருகின்றனர்.
மேலும் பிகாரில் ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் தலைவர் நிதீஷ் குமார் மீண்டும் பாஜக கூட்டணியில் இணைய உள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.
இந்நிலையில் கூட்டணி குறித்து செய்தியாளர்களிடம் சனிக்கிழமை பேசிய ஐக்கிய ஜனதா தளம் கட்சியைச் சேர்ந்த தலைவர் கே.சி.தியாகி, “காங்கிரஸ் கட்சியின் நடவடிக்கைகளால் கூட்டணித் தலைவர்கள் கவலையில் இருக்கிறார்கள். மேற்குவங்கத்தில் மம்தா பானர்ஜியின் அறிவிப்பின் மூலம் சர்ச்சைகள் அதிகமாகி விட்டன.
இதையும் படிக்க | நிதீஷ் குமார் கூட்டணி விலகல்? : ராஷ்டிரிய ஜனதா தலைவர்கள் சந்திப்பு
பிகார் முதல்வரும், ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் நிதீஷ் குமாரின் முயற்சியில் உருவான இந்தியா கூட்டணி காங்கிரஸ் கட்சியின் பொறுப்பற்ற பிடிவாதப் போக்கினால் தற்போது உடைந்துபோகும் தருவாயில் உள்ளது. தற்போது இந்தியா கூட்டணி வீழ்ச்சியை நோக்கி சென்று கொண்டுள்ளது.” என்று தெரிவித்தார்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.