முகப்பு
இந்தியா

புலி, கரடி... ஊருக்குள் வனவிலங்குகள்: அச்சத்தில் மக்கள்

மக்கள் வாழ்விடங்களில் வன விலங்குகளின் நடமாட்டம் அடிக்கடி தென்படுவது அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

Updated On : 7 பிப்ரவரி, 2024 at 3:13 PM
பகிர்:

வயநாடு: கேரள மாநிலம் வயநாடு சுற்றுப் பகுதிகளில் தொடர்ச்சியாக வன விலங்குகள் குடியிருப்பு பகுதிகளில் நுழைந்துவரும் சம்பவங்கள் பதிவாகி வருகிற நிலையில் சனிக்கிழமை ஆண் புலி ஒன்று கூண்டில் சிக்கியுள்ளது.

சமீபத்தில் அருகில் உள்ள பகுதிகளில் கால்நடைகளைக் கொன்ற அதே புலி தான் இது என வனத்துறை அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர்.

பீனாச்சி எஸ்டேட்டில் இந்தக் கூண்டு அமைக்கப்பட்டிருந்தது. வெள்ளிக்கிழமை பசு கன்று ஒன்றைப் புலி கொன்ற இடத்திற்கு அருகில் இந்தக் கூண்டு அமைக்கப்பட்டது.

பிடிபட்ட புலி 11 வயதுடையதாக இருக்கலாம். டபிள்யூ.வொய்.எஸ் 9 என்று அடையாளமிடப்பட்ட இந்தப் புலி சமீபத்தில் வாழ்விடத்தில் புகுந்துள்ளது.

மேலும், வெள்ளிக்கிழமை இரவு கரடி ஒன்று சுற்றித் திரியும் சிசிடிவி காட்சிகள் வெளியாகின.

சில நாட்களாக இந்தக் கரடி மக்கள் வாழ்விடங்களில் சுதந்திரமாக சுற்றித் திரிவது அந்தப் பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்தக் கரடியும் சில நாள்களுக்கு முன்பு வீட்டுக்குள் புகுந்து சர்க்கரையை உண்ட கரடியும் ஒன்றா என இன்னும் அதிகாரிகள் உறுதி செய்யவில்லை.

முழு கட்டுரையைப் படிக்க →