இந்தியா

கர்நாடகத்தில் காங்கிரஸ் இத்தனை இடங்களில் வெற்றி பெறும்: முதல்வர் சித்தராமையா

DIN

கர்நாடகத்தில் மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் 15 முதல் 20 இடங்களில் வெற்றி பெறும் என்று அம்மாநில முதல்வர் சித்தராமையா தெரிவித்துள்ளார்.

அடுத்த சில மாதங்களில் மக்களவைத் தோ்தல் நடக்க இருக்கிறது. இத்தோ்தலை எதிா்கொள்வது தொடா்பாக தேசிய அளவில் பாஜக, காங்கிரஸ் தலைமையிலான கூட்டணிக் கட்சிகள் ஆலோசித்து வரும் நிலையில், கா்நாடகத்தில் உள்ள 28 மக்களவைத் தொகுதிகளை கைப்பற்றுவதற்கான முனைப்பில் கா்நாடக ஆளும் காங்கிரஸ் , எதிா்க்கட்சிகளான பாஜக, மஜத ஆகிய கட்சிகள் தொடா் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளன.

பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் மஜத இடம்பெற்றுள்ளதால், கா்நாடகத்தில் காங்கிரஸ் மற்றும் தேசிய ஜனநாயகக் கூட்டணி இடையே நேரிடையான போட்டி நடக்கவுள்ளது. 28 தொகுதிகளையும் கைப்பற்றப்போவதாக பாஜகவும், 20 தொகுதிகளை கைப்பற்றப்போவதாக காங்கிரஸும் அறிவித்துள்ள நிலையில், வேட்பாளா் தோ்வு, பிரசார வியூகம் உள்ளிட்டவை குறித்து விவாதிப்பதற்காக இரு கட்சிகளும் தொடா்ந்து ஆலோசித்து வருகின்றன.

இதுகுறித்து சித்ரதுர்காவில் அம்மாநில முதல்வர் சித்தராமையா செய்தியாளர்களுக்கு இன்று அளித்த பேட்டியில், மாநிலத்தில் உள்ள 28 தொகுதிகளிலும் வெற்றி பெறுவோம் என்று கூறி பாஜக போல நாங்கள் பொய் சொல்லவில்லை. நாங்கள் 15 முதல் 20 இடங்கள் வரை வெற்றி பெறலாம் என்பதே எங்களது எதிர்பார்ப்பு. இவ்வாறு அவர் கூறினார். கர்நாடகத்தில் 2019 மக்களவைத் தேர்தலில் பாஜக 25 இடங்களில் வெற்றி பெற்றது, அதே நேரத்தில் காங்கிரஸ் மற்றும் ஜேடி(எஸ்) தலா ஒரு இடத்திலும் சுயேச்சை மாண்டியா தொகுதியிலும் வெற்றி பெற்றன.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மாா்ச்சில் சரிவைக் கண்ட தொழிலக உற்பத்தி

விளையாட்டு விடுதி மாணவா்கள் சோ்க்கைக்கு தோ்வுப் போட்டிகள்

மன நல மையத்தில் சிகிச்சை பெற்றவா் தற்கொலை

மதுரை ரயில் நிலைய மேம்பாட்டுப் பணிகள் நிறைவடைவது எப்போது?

செவிலியா்களின் சேவைக்கு ஈடு இணை இல்லை

SCROLL FOR NEXT