இந்தியா

சட்டப்பேரவைத் தேர்தலுக்கு முன்பு நிதீஷ் அணி மாறிவிடுவார்: பிரசாந்த் கிஷோர்

DIN

2025ஆம் ஆண்டு நடைபெற உள்ள பிகார் சட்டப்பேரவை தேர்தல் வரைக்குமே பாஜக - ஐக்கிய ஜனதா தளம் கூட்டணி நீடிக்காது என்று பிரசாந்த் கிஷோர் தெரிவித்துள்ளார்.

இந்தியா கூட்டணியில் அங்கம் வகித்துவந்த ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் தலைவர் நிதீஷ் குமார், திடீரென அதில் இருந்து விலகி, மீண்டும் பாஜக உடன் கைகோர்த்தார்.

இன்று (ஜன.28) காலையில் முதல்வர் பதவியை ராஜிநாமா செய்த நிதீஷ் மாலையில் பாஜக ஆதரவுடன் பிகார் மாநில முதல்வராக மீண்டும் பதவியேற்றுக் கொண்டார். அவருடன் பாஜகவைச் சேர்ந்த சாம்ராட் சௌதரி மற்றும் விஜய் குமார் சின்ஹா ஆகிய இருவரும் துணை முதல்வராகப் பதவியேற்றனர்.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய பிரசாந்த் கிஷோர், “நிதீஷ் குமாரின் இந்த திடீர் மாற்றம் எந்தவித ஆச்சரியத்தையும் ஏற்படுத்தவில்லை. மகாகட்பந்தனில் அவர் இணைந்தபோதே, அந்தக் கூட்டணியில் அவர் நீடிக்க மாட்டார் என்று கூறினேன். 

நிதீஷைப் போலவேதான் பாஜகவும் சந்தர்ப்பவாத அரசியல் செய்கிறது. மக்களவைத் தேர்தலை கணக்கில் வைத்து பாஜக இந்த முடிவை எடுத்துள்ளது. ஆனால் இதனால் சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக பெரிய விலை கொடுக்க நேரிடும். 

2024 மக்களவைத் தேர்தலுக்குப் பிறகு நிதீஷ் குமார் எந்த வழியில் செல்வார் என்று யாராலும் சொல்ல முடியாது. நிச்சயமாக பாஜக - ஐக்கிய ஜனதா தளம் கூட்டணி 2025ம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தல் வரை நீடிக்காது. இன்னும் சொல்லப்போனால், மக்களவைத் தேர்தல் முடிந்த ஓரிரு மாதங்களிலேயே இந்தக் கூட்டணி முறியும்.” என்று கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஒகேனக்கல் அருவிகளில் நீர்வரத்து அதிகரிப்பு!

பிளஸ் 1 தேர்ச்சியில் கோவை முதலிடம்: விழுப்புரம் கடைசி!

’மஞ்சள் காய்ச்சல்’ தடுப்பூசி கட்டாயம் -சுகாதாரத்துறை அறிவுறுத்தல்

பிளஸ் 1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது!

பிளஸ் 1 முடிவு: எந்தெந்த பாடத்தில் எத்தனை பேர் சதம்?

SCROLL FOR NEXT