இந்தியா

இந்தியர்களுக்கு கடந்த ஆண்டில் 14 லட்சம் விசாக்கள் வழங்கப்பட்டுள்ளன - அமெரிக்க தூதரகம்

DIN

புது தில்லி : அமெரிக்காவுக்கு பயணம் மேற்கொள்ளும் இந்தியர்களுக்காக, கடந்த ஆண்டில், 14 லட்சம்(1.4 மில்லியன்) அமெரிக்க விசாக்கள்  வழங்கப்பட்டுள்ளதாக அமெரிக்க தூதரகம் தெரிவித்துள்ளது.

மேலும், விசா பெறுவதற்கான காத்திருப்பு நேரம் 75 சதவிகிதம் குறைந்துள்ளதாகவும் அமெரிக்க தூதரக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, விசா பெறுவதற்கான காத்திருப்பு நேரம், சராசரியாக 1000 நாட்களாக இருந்த நிலையில், காத்திருப்பு நேரம்  தற்போது 250 நாட்களாக குறைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.  
   
அமெரிக்க விசா பெறுவதற்கு இந்தியர்களிடமிருந்து பெறப்பட்ட விண்ணப்பங்கள், கடந்த 2022-ஆம் ஆண்டை காட்டிலும், கடந்த ஆண்டு 60 சதவிகிதம் அதிகரித்திருப்பதாகவும், அமெரிக்கா செல்வதற்கான விசா பெற விண்ணப்பிப்பவர்களில் பத்தில் ஒருவர் இந்தியராக உள்ளார் என அமெரிக்க தூதரக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பி1/பி2 பார்வையாளர் விசாக்கள் பெறுவதற்காக, பெறப்பட்ட விண்ணப்பங்கள், 7 லட்சத்தை தாண்டியுள்ளதாக அமெரிக்க தூதரகம் தெரிவித்துள்ளது.எந்த நாட்டுக்கும் இல்லாத அளவாக, இந்தியாவில் உள்ள மாணவர்களுக்காக கடந்த ஆண்டு 1,40,000 மாணவர் விசாக்கள் வழங்கப்பட்டுள்ளதகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.   

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

5-ம் கட்டத் தேர்தல்: மகனுடன் சென்று வாக்கு செலுத்திய சச்சின் டெண்டுல்கர்

தந்தையுடன் வாக்களித்த நடிகை குஷி கபூர்!

ரேபரேலி வாக்குச் சாவடியில் ராகுல் ஆய்வு!

சிறுபான்மையினருக்கு எதிராக ஒரு வார்த்தைகூட பேசியதில்லை: மோடி

ரூ.263 கோடி வரி மோசடி: கைது செய்த அமலாக்கத்துறை!

SCROLL FOR NEXT