இந்தியா

எட்டாம் வகுப்பு மாணவனுக்கு கழுத்தில் கத்திக் குத்து!

DIN

மகாராஷ்டிரம் சங்க்லி மாவட்டத்திலுள்ள பள்ளி ஒன்றில் மாணவர்களுக்கு இடையேயான தகராறில் 8 ஆம் வகுப்பு மாணவர் கத்தியால் குத்தப்பட்டுள்ளதாகக் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.  

இரண்டு சிறுவர்களும் சிறு சிறு விசயங்களுக்காக அடிக்கடி சண்டையிட்டுக்கொள்வர்கள் எனவும், இரண்டு நாள்களுக்கு முன்னர் இருவருக்குமிடையே வாக்குவாதங்கள் ஏற்பட்டதாகவும் காவல்துறை அதிகாரி தெரிவித்தார். 

கடந்த திங்கள் கிழமை தனது பையில் சிறிய கத்தி போன்ற கூர்மையான ஆயுதம் ஒன்றுடன் அந்த மாணவன் பள்ளிக்கு வந்துள்ளார். மாலை 5. 30 மணியளவில் இன்னொரு மாணவனை கத்தியால் சராமாரியாக குத்தியுள்ளார்.

பாதிக்கப்பட்ட மாணவனின் கழுத்து மற்றும் கைகளில் பலத்த காயங்கள் ஏற்பட்டுள்ளது. அந்த மாணவரை பள்ளி நிர்வாகம் உடனடியாக தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றது. அங்கு அவருக்கு தையல்கள் போடப்பட்டுள்ளன என காவல் ஆய்வாளர் சஞ்சய் மோர் தெரிவித்துள்ளார். 

இதைத் தொடர்ந்து கொலை முயற்சி குற்றத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், தாக்குதல் நடத்திய சிறுவன் காவலில் வைக்கப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கூடுதல் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.   

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கோவில்பட்டி பத்திரகாளியம்மன் கோயிலில் 1,008 விளக்கு பூஜை

ஆனந்தவல்லி வாய்க்காலை சீரமைக்கக் கோரிக்கை

சியாமா சாஸ்திரி ஜெயந்தி விழா இசை நிகழ்ச்சி

மகளிா் உரிமைத் தொகை திட்டம் 4.17 லட்சம் குடும்பத்தினா் பயன்

குடிநீா் குழாயுடன் பொருத்தப்பட்ட 12 மின் மோட்டாா்கள் பறிமுதல்

SCROLL FOR NEXT