நாடாளுமன்றத்தில் அனைத்துக் கட்சி கூட்டம் தொடங்கியது 
இந்தியா

நாடாளுமன்றத்தில் அனைத்துக் கட்சி கூட்டம் தொடங்கியது!

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரையொட்டி, இரு அவைகளில் உள்ள அரசியல் கட்சிகளின் தலைவா்கள் பங்கேற்கும் அனைத்துக் கட்சி கூட்டம் தொடங்கியது.

DIN

புதுதில்லி: நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரையொட்டி, இரு அவைகளில் உள்ள அரசியல் கட்சிகளின் தலைவா்கள் பங்கேற்கும் அனைத்துக் கட்சி கூட்டம் தொடங்கியது.

ஆண்டின் முதல் கூட்டத்தொடரான பட்ஜெட் கூட்டத்தொடா், குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு உரையுடன் புதன்கிழமை (ஜன.31) தொடங்கி, அடுத்த மாதம் 9-ஆம் தேதி வரை நடைபெறுகிறது.

இந்த நிலையில், நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சா் பிரகலாத் ஜோஷி தலைமையில் அனைத்துக் கட்சி கூட்டம் நாடாளுமன்ற நூலகக் கட்டடத்தில் இன்று காலை கூடியுள்ளது.

இந்த கூட்டத்தில் மத்திய அமைச்சர்கள் ராஜ்நாத் சிங், பியூஸ் கோயல், பிரகலாத் ஜோச்ஷி உள்ளிட்டோர் கலந்து கொண்டுள்ளனர்.

பொதுவாக, நாடாளுமன்ற கூட்டத்தொடா் தொடங்குவதற்கு முன்பாக, கூட்டத்தொடரின் அலுவல்கள் குறித்து விவாதிக்க அனைத்துக் கட்சி கூட்டத்தை மத்திய அரசு கூட்டுவது வழக்கம்.

அடுத்த சில மாதங்களில் மக்களவைத் தோ்தல் நடைபெற உள்ளதால், இடைக்கால பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் பிப்.1-ஆம் தேதி தாக்கல் செய்கிறாா். தோ்தலில் வெற்றி பெற்ற பிறகு அமையும் புதிய அரசு, முழு பட்ஜெட்டை தாக்கல் செய்யும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பிகார் தேர்தல்: பாஜக 101, ஐக்கிய ஜனதா தளம் 101 தொகுதிகளில் போட்டி!

உலகக் கோப்பை: ஸ்மிருதி, பிரதீகா அசத்தல்; ஆஸி.க்கு 331 ரன்கள் இலக்கு!

இந்த வராம் கலாரசிகன் - 12-10-2025

பொறியாளர்கள் பணிக்கான தேர்வு: யுபிஎஸ்சி அறிவிப்பு

பழந்தமிழரின் காலநிலை அறிவு!

SCROLL FOR NEXT