மகாத்மா காந்தியின் 76-வது நினைவு நாளையொட்டி ராஜ்கட்டில் உள்ள காந்தி நினைவிடத்தில் குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு, பிரதமர் நரேந்திர மோடி ஆகியோர் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
பிரதமர் மோடி அவரது எக்ஸ் பக்கத்தில் "இந்த புண்ணிய திதியில் மதிப்பிற்குரிய அவருக்கு நான் மரியாதை செலுத்துகிறேன். நமது நாட்டிற்காக தியாகம் செய்த அனைவருக்கும் நான் அஞ்சலி செலுத்துகிறேன்.
அவர்களின் தியாகங்கள் மக்களுக்கு சேவை செய்யவும், நாட்டிற்காக அவர்களின் நோக்கங்களை நிறைவேற்றவும் நம்மை ஊக்குவிக்கின்றது" என அவர் தெரிவித்தார்.
இதையும் படிக்க: அடுத்த 3 ஆண்டுகளில் உலகின் மூன்றாவது பெரிய பொருளாதாரமாக இந்தியா மாறும்: மத்திய நிதியமைச்சகம்
1948ல் காந்தி நாதுராம் விநாயக் கோட்சே எனும் இந்து தேசியவாதியால் கொலை செய்யப்பட்டார். 1949-ல் கோட்சேவுக்கு மரணதண்டனை வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.