பாஜக பிரமுகர் கொலை: கேரளத்தில் 15 பேருக்கு தூக்குத் தண்டனை 
இந்தியா

பாஜக பிரமுகர் கொலை: கேரளத்தில் 15 பேருக்கு மரண தண்டனை! 

கேரளத்தில் பாஜக மாநில தலைவர் ரஞ்சித் சீனிவாசன் கொலை வழக்கில் 15 பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 

DIN

கேரளத்தில் பாஜக மாநில தலைவர் ரஞ்சித் சீனிவாசன் கொலை வழக்கில் 15 பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 

கேரள மாநில ஓபிசி பிரிவின் தலைவராக இருந்த ரஞ்சித் ஸ்ரீனிவாசன் என்பவர் 2021 டிச.19ஆம் தேதி அவரது குடும்பத்தினர் முன்னே கொல்லப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பான வழக்கு மவேலிக்கரா நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. 

குற்றம் சாட்டப்பட்ட 15 பேரில் எட்டு பேர் நேரடியாக இந்த கொலை சம்பவத்தில் ஈடுபட்டுள்ளனர். மற்றவர்கள் இதில் மறைமுகமாக சம்மந்தப்பட்டுள்ளனர் என்று அரசு தரப்பு வழக்குரைஞர் குற்றம் சாட்டினார். 

இந்த நிலையில், பாஜக ஓபிசி பிரிவு தலைவர் கொல்லப்பட்ட வழக்கில் 15 பேரும் குற்றவாளிகள் என கேரள நீதிமன்றம் தீர்ப்பளித்தது. 

குற்றம் சாட்டப்பட்டவர்கள் தடை செய்யப்பட்ட பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பைச் சேர்ந்த அஜ்மல், அனூப், அஸ்லாம் ஆவார். இவர்கள் 15 பேருக்கும் மரண தண்டனை விதித்து ஆலப்புழா நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நெல்லையில் பரபரப்பு... காவல் நிலையம், சோதனைச் சாவடி அருகே பெட்ரோல் குண்டு வீச்சு!

தவெக நிர்வாகிகளை குண்டுக்கட்டாக தூக்கிச் சென்று கைது செய்த போலீசார்!

பெண்கள் மீதான கறை மமதா பானர்ஜி: பாஜக கடும் விமர்சனம்

வா வாத்தியார் படத்தின் புகைப்படங்கள்

தொழிலாளா் வருங்கால வைப்புநிதி விவகாரம்: தற்காலிக தூய்மைப் பணியாளா்கள் பணி புறக்கணிப்பு வாபஸ்

SCROLL FOR NEXT