இந்தியா

தேச விரோத வழக்கில் மேலும் 3 பேர் மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல்

DIN

புது தில்லி: தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) தடை செய்யப்பட்ட பாப்புலர் ப்ஃரண்ட் ஆப் இந்தியா (பிஎஃப்ஐ) அமைப்பைச் சேர்ந்த மூவர் மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்துள்ளது.

இஸ்லாமிய இளைஞர்களைப் பயங்கரவாதம் நோக்கி செலுத்தியது, அவர்களுக்கு ஆயுதப் பயிற்சி அளித்தது 2047-க்குள் இந்தியாவில் இஸ்லாமிய ஆட்சியை கொண்டு வரத் திட்டமிட்டது ஆகிய சதி திட்டங்களில் அவர்கள் ஈடுபட்டதாக என்ஐஏ தெரிவித்துள்ளது.

சட்டத்திற்கு புறம்பான மற்றும் தேச விரோதமான செயல்களில் ஈடுபட்டுவரும் காரணங்களுக்காக வஜீத் அலி, முபாரக் அலி மற்றும் சம்ஷேர் கான் ஆகியோர் மீது ராஜஸ்தானில் சதி வழக்கு தொடரப்பட்டது.

முன்னதாக ஆஷிப், சாதிக் மற்றும் முகமது சுஹெல் ஆகியோர் மீது இஸ்லாமிய இளைஞர்களைப் பயங்கரவாத செயல்களுக்குப் பயன்படுத்த அவர்களுக்கு ஆயுத பயிற்சி அளித்த வழக்கில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது.

இந்தியாவில் இஸ்லாமிய ஆட்சி 2047-க்குள் கொண்டுவரும் சதித் திட்டத்திற்கு எதிராக இருப்பவர்களை தாக்கவும் அரசை எதிர்க்கவும் இந்த ஆயுத பயிற்சி அளிக்கப்பட்டதாக இவர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இந்திய தேர்தலில் தலையிட அமெரிக்கா முயற்சி: ரஷியா குற்றச்சாட்டு

துணிந்த, பயமறியாத, தன்முனைப்புள்ள இளவரசி!

நயன்தாராவின் ‘மண்ணாங்கட்டி’ படப்பிடிப்பு நிறைவு!

6 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும்!

ஹிந்துக்களின் மக்கள்தொகை சரிவுக்கு காங்கிரஸ் தான் காரணம்: பாஜக குற்றச்சாட்டு

SCROLL FOR NEXT