தண்டவாளத்தில் உடல்கள்: ரயில் மோதி விபத்தா?
ரயில் மோதி உயிரிழந்த நபர்கள் யாரென்கிற விபரம் இன்னும் கிடைக்கவில்லை.
கேரளா மாநிலம் காசர்கோடு பகுதியில் ரயில் தண்டவாளத்தில் இருவரின் உடல் இறந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளதாக காவலர்கள் தெரிவித்துள்ளனர்.
இருவரும் சரக்கு ரயில் மோதி விபத்துக்குள்ளாகியிருக்கலாம் என நம்பப்படுகிறது.
இறந்தவர்களின் அடையாளம் தெரியவில்லை. இந்த விபத்து தகவல் கிடைத்ததும் காசர்கோடு காவல்துறை மற்றும் ரயில் பாதுகாப்பு படை சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.
ஒருவர் உடல் ரயில் தண்டவாளத்திலும் மற்றொருவர் உடல் ரயில் தண்டவாளத்துக்கு அருகிலும் மீட்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்க: ஜார்கண்ட் முதல்வர் வீட்டுக்கு வெளியே 144 தடை!
இவர்களின் இறப்பு குறித்தும் அந்த நபர்கள் யாரென்பது குறித்தும் காவலர்கள் விசாரித்து வருகின்றனர்.