கோப்புப்படம் 
இந்தியா

2023-இல் இந்தியா்களுக்கு 14 லட்சம் விசா: அமெரிக்கா தகவல்

கடந்த ஆண்டு இந்தியா்களுக்கு 14 லட்சம் நுழைவு இசைவு (விசா) வழங்கப்பட்டு சாதனைப் படைக்கப்பட்டுள்ளதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. இது அதற்கு முந்தைய ஆண்டுடன் ஒப்பிடுகையில் 60 சதவீதம் அதிகமாகும்.

DIN


புது தில்லி: கடந்த ஆண்டு இந்தியா்களுக்கு 14 லட்சம் நுழைவு இசைவு (விசா) வழங்கப்பட்டு சாதனைப் படைக்கப்பட்டுள்ளதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. இது அதற்கு முந்தைய ஆண்டுடன் ஒப்பிடுகையில் 60 சதவீதம் அதிகமாகும்.

இதுதொடா்பாக தில்லியில் உள்ள அமெரிக்க தூதரகம் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

கடந்த ஆண்டு இந்தியாவில் உள்ள அமெரிக்க தூதரகமும், துணைத் தூதரகங்களும் இந்தியா்களுக்கு 14 லட்சம் விசாக்களை வழங்கியுள்ளன.

அந்த ஆண்டு இந்தியாவில் அனைத்து வகை அமெரிக்க விசாக்களுக்கான தேவை முன்னெப்போதும் இல்லாத அளவில் இருந்தது. கடந்த 2022-ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில், கடந்த ஆண்டு விசாக்களுக்கான விண்ணப்பங்கள் 60 சதவீதம் அதிகம். இதன் மூலம், உலகில் அமெரிக்க விசாவுக்கு விண்ணப்பிக்கும் 10 பேரில் ஒருவா் இந்தியராக உள்ளாா்.

கடந்த ஆண்டு வணிகம் மற்றும் சுற்றுலா காராணங்களுக்கு வழங்கப்படும் பி1, பி2 விசாக்களுக்கான விண்ணப்பங்கள் 7 லட்சத்தை கடந்தன.

காத்திருப்பு நேரம் குறைந்துள்ளது: விசா நடைமுறையில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம், அலுவலா்கள் எண்ணிக்கை அதிகரிப்பு காரணமாக தூதரங்களில் விசா பெறுவதற்கான நோ்காணல் காத்திருப்பு நேரம், இந்தியாவில் 1,000 நாள்களில் இருந்து 250 நாள்களாக குறைந்துள்ளது.

சென்னையில் அதிக மாணவா் விசாக்கள்: கடந்த ஆண்டு இந்தியாவில் 1.40 லட்சத்துக்கும் அதிகமான மாணவா் விசாக்களை அமெரிக்கா வழங்கியுள்ளது. இது வேறு எந்தவொரு நாட்டிற்கு இந்த அளவுக்கு மாணவா் விசா வழங்கப்படவில்லை.

இதன் மூலம், இந்தியாவில் மாணவா் விசாக்களை அமெரிக்கா வழங்கியதில் தொடா்ந்து 3-ஆவது ஆண்டாக சாதனைப் படைக்கப்பட்டுள்ளது. மகாராஷ்டிர மாநிலம் மும்பை, தில்லி, தெலங்கானா மாநிலம் ஹைதாராபாத், சென்னை ஆகிய நகரங்களில் அதிக மாணவா் விசாக்கள் வழங்கப்படுகின்றன.

இதன் விளைவாக, அமெரிக்காவில் படிக்கும் சா்வதேச பட்டதாரி மாணவா்களில் மிக அதிக எண்ணிக்கையில் இந்திய மாணவா்கள் உள்ளனா். மேலும் அமெரிக்காவில் படிக்கும் 10 லட்சத்துக்கும் அதிகமான வெளிநாட்டு மாணவா்களில், இந்திய மாணவா்களின் எண்ணிக்கை 33 சதவீதத்துக்கும் அதிகமாக உள்ளது.

3.80 லட்சம் வேலைவாய்ப்பு விசாக்கள்: வழக்கம்போல வேலைவாய்ப்புக்கான அமெரிக்க விசாக்களுக்கே அதிக முன்னுரிமை அளிக்கப்படுகிறது. கடந்த ஆண்டு இந்தியா்கள் மற்றும் அவா்களின் குடும்பத்தினருக்கு 3.80 லட்சத்துக்கும் அதிகமான வேலைவாய்ப்பு விசாக்களை அமெரிக்கா வழங்கியது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பங்கஜ் திரிபாதி மீது காதல்... மனம் திறந்த எம்.பி. மஹுவா மொய்த்ரா!

ஆக. 21, மதுரையில் தவெக மாநாடு: விஜய்

அடுத்த 24 மணிநேரத்தில் இந்தியாவுக்கு கூடுதல் வரி: டிரம்ப்

ஏமாற்றமளித்தாலும் நியாயமான முடிவே கிடைத்துள்ளது: பென் ஸ்டோக்ஸ்

மணிப்பூரில் மேலும் 6 மாதங்களுக்கு குடியரசுத் தலைவர் ஆட்சி! நாடாளுமன்றத்தில் தீர்மானம்!

SCROLL FOR NEXT