ஹேமந்த் சோரன் (கோப்புப்படம்) 
இந்தியா

ஜார்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரனின் வீட்டைச் சுற்றி 144 தடை!

ராஞ்சியில் உள்ள ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரனின் வீடு, ஆளுநர் மாளிகை மற்றும் அமலாக்கத்துறை அலுவலகத்தைச் சுற்றி 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

DIN

ராஞ்சியில் உள்ள ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரனின் வீடு, ஆளுநர் மாளிகை மற்றும் அமலாக்கத்துறை அலுவலகத்தைச் சுற்றி 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

நிலமோசடி வழக்கு தொடர்பாக தில்லியில் உள்ள ஹேமந்த் சோரனின் வீட்டில் திங்கள்கிழமை நடத்தப்பட்ட சோதனையில் ரூ. 36 லட்சம் ரொக்கம், சொகுசு கார், ஆவணங்கள் சிலவற்றையும் அமலாக்கத்துறையினர் கைப்பற்றினர்.

இதனைத் தொடர்ந்து, ராஞ்சி இல்லத்தில் மீண்டும் இரண்டாவது முறையாக ஹேமந்த் சோரனிடம் இன்று அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.

அமலாக்கத்துறை அதிகாரிகள் அத்துமீறி விசாரணை நடத்தியதாக இன்று ராஞ்சியில் உள்ள காவல் நிலையத்தில் அமலாக்கத்துறை அதிகாரிகள் மீது சோரன் வழக்குப் பதிவு செய்தார்.

இந்த நிலையில் அமலாக்கத்துறையினரின் விசாரணைக்கு எதிராக போராட்டங்கள் நடைபெற்று வருவதால்,  ஹேமந்த் சோரனின் வீடு, ஆளுநர் மாளிகை மற்றும் அமலாக்கத்துறை அலுவலகத்தைச் சுற்றி 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பிரதமர் நரேந்திர மோடியாக நடிக்கும் உன்னி முகுந்தன்!

இந்திய டெஸ்ட்: மே.இ.தீவுகள் அணி அறிவிப்பு! முன்னாள் கேப்டன் பிராத்வெயிட் நீக்கம்!

தில்லியில் அமித் ஷாவை சந்தித்தது ஏன்? இபிஎஸ் விளக்கம்!

பெரியாரின் போராட்டங்கள் பல தலைமுறையாக வழிகாட்டுகிறது! தமிழில் பதிவிட்ட பினராயி விஜயன்!

பிரதமர் மோடி பிறந்தநாள்: தலைவர்கள் வாழ்த்து!

SCROLL FOR NEXT