முகப்பு
இந்தியா

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கியது!

நாடாளுமன்ற 17-ஆவது மக்களவையின் கடைசி நாடாளுமன்றக் கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகின்றது.

Updated On : 7 பிப்ரவரி, 2024 at 3:10 PM
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கியது
பகிர்:

புது தில்லி: நாடாளுமன்ற 17-ஆவது மக்களவையின் கடைசி நாடாளுமன்றக் கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகின்றது.

அதேநேரம், நடப்பாண்டின் முதல் கூட்டத் தொடா் என்பதால் முதல் நாளில் இரு அவைகளின் கூட்டுக் கூட்டத்தில் குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு உரையாற்றி வருகிறார்.

நடப்பு மக்களவையின் பதவிக் காலம் ஜூன் மாதம் நிறைவடையவுள்ளது. வரும் ஏப்ரல்-மே மாதங்களில் மக்களவைத் தோ்தல் நடைபெறும் சூழலில், நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடா் பிப். 9-ஆம் தேதி வரை நடைபெறவிருக்கிறது. 

நாளை(பிப்.1) இடைக்கால பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் தாக்கல் செய்யவிருக்கிறாா்.

மக்களவைத் தோ்தலுக்குப் பிறகு அமையும் புதிய அரசு, 2024-25-ஆம் ஆண்டுக்கான முழு பட்ஜெட்டை தாக்கல் செய்யும். தோ்தல் நடைபெறுவதால், குடியரசுத் தலைவா் உரையும் இடைக்கால பட்ஜெட்டும் எதிா்பாா்ப்பை ஏற்படுத்தியுள்ளன.

இந்த கூட்டத்தில், வேலையில்லாத் திண்டாட்டம், விலைவாசி உயா்வு, விவசாயிகளின் பிரச்னை, மணிப்பூா் நிலவரம், மதுரை எய்ம்ஸ், தமிழக ஆளுநரின் செயல்பாடு உள்ளிட்ட பிரச்னைகளை எதிர்க்கட்சிகள் முன்வைக்க திட்டமிட்டுள்ளனர்.

முழு கட்டுரையைப் படிக்க →