கோப்புப் படம் 
இந்தியா

ரூ. 7,581 கோடி மதிப்புடைய ரூ. 2,000 நோட்டுகள் இன்னும் வரவில்லை: ஆர்பிஐ

2024 ஜூன் மாதத்துடன் 97.87% ரூ. 2,000 நோட்டுகள் கிடைக்கப்பெற்றன.

DIN

ரூ. 7,581 கோடி மதிப்புடைய 2.1 சதவீத ரூ. 2,000 நோட்டுகள் இன்னும் வரவில்லை என ரிசர்வ் வங்கி இன்று (ஜூலை 1) தெரிவித்துள்ளது.

2024 ஜூன் மாத நிறைவுடன் 97.87 சதவீத நோட்டுகள் கிடைக்கப்பெற்றுள்ளன. ரூ.2,000 நோட்டுகளை மாற்றிக்கொள்ள அவகாசம் கொடுத்து 9 மாதங்களாகியும் இன்னும் ரூ.7,581 கோடி மதிப்புடைய நோட்டுகள் வரவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிக மதிப்புடைய ரூ.2000 நோட்டுகளைத் திரும்பப் பெறுவதாக 2023 மே 19ஆம் தேதி ரிசர்வ் வங்கி அறிவித்திருந்தது. அந்தகாலகட்டத்தில் 3.56 லட்சம் கோடி மதிப்புடைய ரூ. 2,000 நோட்டுகள் சந்தையில் புழக்கத்தில் இருந்தன.

2023 அக்டோபர் 7ஆம் தேதிக்குள் வங்கிகள் மூலமாகவோ, ரிசர்வ் வங்கி அலுவலகங்களிலோ நோட்டுகளை மாற்றிக்கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

அதன்பிறகு ரிசர்வ் வங்கியின் 19 கிளைகளில், பல்வேறு வழிகளில் 2000 ரூபாய் நோட்டுகளை மாற்றிக்கொள்ள வழிவகை செய்யப்பட்டது.

மக்கள் நாட்டின் எந்த மூலையில் இருந்தாலும் அஞ்சல் மூலமாக, ஆர்பிஐ கிளைகளுக்கு 2000 ரூபாய் நோட்டுகளை அனுப்பி பணமாக மாற்றிக் கொள்ளவும் வழிவகை செய்யப்பட்டது.

2016 நவம்பர் மாதம் ரூ.2,000 நோட்டுகள் அறிமுகம் செய்யப்பட்டன. 2016ஆம் ஆண்டு நவம்பர் மாதம் புழக்கத்தில் இருந்த ரூ.500, ரூ.1000 நோட்டுகள் பணமதிப்பிழக்கம் செய்யப்பட்டபோது ரிசர்வ் வங்கியால் ரூ. 2000 ரூபாய் நோட்டுகள் அறிமுகப்படுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மின்வாரிய ஊழியரைத் தாக்கிய தம்பதி மீது வழக்கு

கைப்பேசி பறிப்பு: இருவா் கைது

அங்கன்வாடி ஊழியா்கள் ஆா்ப்பாட்டம்

விவசாயிகளுக்கு நிலக்கடலை மதிப்புக்கூட்டுப் பயிற்சி

மாநாட்டில் 6 தீா்மானங்கள்

SCROLL FOR NEXT