கோப்புப் படம் -
இந்தியா

ராகுல் மன்னிப்பு கோரவேண்டும்: அஸ்ஸாம் முதல்வர்

இந்து அமைப்பினரை அவமதித்ததற்காக ராகுல் மன்னிப்பு கோரவேண்டும் என்று ஹிமந்தா பிஸ்வா சர்மா வலியுறுத்தல்

DIN

மக்களவையில் ராகுல் காந்தி இந்து அமைப்பினரை அவமதிப்பதாகக் கூறி, அதற்காக அவர் மன்னிப்பு கோரவேண்டும் என்று அஸ்ஸாம் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா வலியுறுத்தியுள்ளார்.

இன்று மக்களவையில் குடியரசுத் தலைவரின் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதம் நடைபெற்றது. விவாதத்தில் பங்கேற்ற ராகுல் காந்தி பாஜக மீது பல்வேறான விமர்சனங்களை அடுக்கினார். அதில் ஒன்றாக `பாஜக இந்துக்கள் அல்ல’ என்று விமர்சித்திருந்தார்.

அதாவது ராகுல் காந்தி, ”தங்களை இந்துக்கள் என்று 24 மணி நேரமும் அழைத்துக் கொள்ளும் பாஜக தான் வன்முறையிலும் வெறுப்பிலும் ஈடுபடுகின்றனர்” என்று கூறியிருந்தார்.

இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக பிரதமர் மோடி,``ராகுலின் உரை ஒட்டுமொத்த இந்து சமூகத்தையும் வன்முறையுடன் ஒப்பிடும் தாக்குதலாக உள்ளது” என்று ராகுலுக்கு பதிலளித்தார்.

இந்நிலையில், அஸ்ஸாம் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா மக்களவையில் ராகுல் காந்தியின் கருத்திற்காக அவர் மன்னிப்பு கோரவேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

ஹிமந்தா பிஸ்வா சர்மா கூறியிருப்பதாவது, ``ராகுல் காந்தியின் உரை எதிர்க்கட்சித் தலைவரைப் போல் இல்லாமல், இந்து விரோத அமைப்பின் தலைவரைப் போல உள்ளது” என்று தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ராணிப்பேட்டை ஆட்சியா் அலுவலகத்தில் மக்கள் முற்றுகை

நல்ல நாள் இன்று: தினப்பலன்கள்!

திருவள்ளுவா் பல்கலை.யில் இன்று பட்டமளிப்பு விழா

திருவள்ளூா்: குறைத்தீா் கூட்டத்தில் 362 மனுக்கள்

விளைபயிா்களை சேதப்படுத்திய ஒற்றை யானை விரட்டியடிப்பு

SCROLL FOR NEXT