இந்தியா

தேசிய பாதுகாப்பு துணை ஆலோசகராக ஐபிஎஸ் அதிகாரி ரவிசந்திரன் நியமனம்

தேசிய பாதுகாப்பு துணை ஆலோசகராக டி.வி.ரவிசந்திரன் நியமனம்

DIN

புது தில்லி: தேசிய பாதுகாப்பு துணை ஆலோசகராக மத்திய உளவுத்துறையின் சிறப்பு இயக்குநரும், 1990- தமிழகப் பிரிவைச் சோ்ந்த மூத்த ஐபிஎஸ் அதிகாரியுமான டி.வி.ரவிசந்திரனை மத்திய அரசு செவ்வாய்க்கிழமை நியமித்தது.

இதுதொடா்பாக தேசிய பாதுகாப்பு கவுன்சில் செயலகம் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிவிக்கையில், ‘தேசிய துணை பாதுகாப்பு ஆலோசகராக மூத்த ஐபிஎஸ் அதிகாரி டி.வி.ரவிசந்திரனை அடுத்த 2 ஆண்டுகளுக்கு நியமிக்க மத்திய அமைச்சரவையின் நியமனக் குழு ஒப்புதல் அளித்துள்ளது.

இதேபோல், தேசிய பாதுகாப்பு துணை ஆலோசகராக இருந்த ராஜீந்தா் கன்னா தேசிய பாதுகாப்பு கூடுதல் ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ளாா்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கட்டுமானத் தொழிலாளா் சங்கம் ஆா்ப்பாட்டம்

திற்பரப்பு அருகே இளைஞா், தொழிலாளி தற்கொலை

இன்றைய மின்தடை

வேன் மோதி அரசுப் பள்ளி தலைமை ஆசிரியா் மரணம்

தில்லியில் நீா் தேங்குதலும், மாசுவும் பாரம்பரிய பிரச்னைகள்: முதல்வா் ரேகா குப்தா

SCROLL FOR NEXT