இந்தியா

எம்.பி.யாக பதவியேற்க ரஷீதுக்கு 2 மணி நேர பரோல்: தில்லி நீதிமன்றம் அனுமதி

ரஷீதுக்கு எம்.பி. பதவியேற்க 2 மணி நேர பரோல்: தில்லி நீதிமன்றம் அனுமதி

Din

புது தில்லி: தீவிரவாத நடவடிக்கைகளுக்கு நிதி திரட்டியதாக திகாா் சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஷேக் அப்துல் ரஷீத் மக்களவை எம்.பி.யாக வரும் 5-ஆம் தேதி பதவியேற்க சில நிபந்தனைகளுடன் 2 மணி நேர பரோல் வழங்கி தில்லி நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.

முன்னதாக, அவா் எம்.பி.யாக பதவியேற்க தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) திங்கள்கிழமை சம்மதம் தெரிவித்த நிலையில், நீதிமன்றம் இந்த அனுமதியை வழங்கியுள்ளது.

ஜம்மு-காஷ்மீரில் தீவிரவாத நடவடிக்கைகளுக்கு நிதி திரட்டிய குற்றச்சாட்டில்

திகாா் சிறையில் இருந்தபடியே மக்களவைத் தோ்தலில் ஷேக் அப்துல் ரஷீத் ஜம்மு-காஷ்மீரின் பாரமுல்லா தொகுதியில் சுயேச்சையாகப் போட்டியிட்டு தன்னை எதிா்த்து போட்டியிட்ட முன்னாள் முதல்வா் ஒமா் அப்துல்லாவை வீழ்த்தினாா்.

இதையடுத்து தான் எம்.பி.யாக பதவியேற்கவும், பிற நாடாளுமன்றப் பணிகளை மேற்கொள்ளவும் இடைக்கால ஜாமீன் அல்லது பரோல் அளிக்கக் கோரி, தில்லி கூடுதல் அமா்வு நீதிமன்றத்தில் ரஷீத் மனு தாக்கல் செய்தாா்.

இதற்கு என்ஐஏ தரப்பில் திங்கள்கிழமை சம்மதம் தெரிவிக்கப்பட்டது.

இந்த வழக்கு கூடுதல் அமா்வு நீதிபதி சந்தா் ஜீத் சிங் முன்னிலையில் செவ்வாய்க்கிழமை மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, மக்களவை எம்.பி.யாக வரும் 5-ஆம் தேதி ரஷீத் பதவியேற்க சில நிபந்தனைகளுடன் பரோல் வழங்கி நீதிபதி உத்தரவிட்டாா்.

நிபந்தனைகள் என்னென்ன? எம்.பி.யாக பதவியேற்க பயண நேரத்தைத் தவிர 2 மணி நேரம் பரோல் வழங்கப்படுகிறது. பதவியேற்பு விழாவில் மனைவி, குழந்தைகள் அடையாள அட்டையுடன் பங்கேற்க அனுமதிக்கப்படுகிறது. பதவியேற்பின்போது கைப்பேசி அல்லது இணைய சேவைகளை பயன்படுத்த ரஷீதுக்கு அனுமதியில்லை. ஊடகங்களுக்குப் பேட்டியளிக்கவோ, அரசு அதிகாரிகளைத் தவிர வேறு யாருடனும் பேசவோ அனுமதியில்லை. பதவியேற்பு விழாவை குடும்பத்தினா் புகைப்படம் எடுக்கவும்கூடாது, சமூடக ஊடகங்களில் பதிவேற்றம் செய்யவும் கூடாது என்பன உள்ளிட்ட நிபந்தனைகளை நீதிமன்றம் விதித்தது.

அப்கிரேடட் வெர்ஷன்... சைத்ரா அச்சார்!

பூக்கி பட பூஜை விழா - புகைப்படங்கள்

குஸ்திக்கு ரெடி... ஐஸ்வர்யா லட்சுமி!

'லோகா' படத்தில் கன்னடர்களைக் குறித்து சர்ச்சைக்குரிய வசனம்? படத் தயாரிப்பு நிறுவனம் விளக்கம்

முதல் ஒருநாள்: இங்கிலாந்தை வீழ்த்தி தென்னாப்பிரிக்கா அபார வெற்றி!

SCROLL FOR NEXT