ரத யாத்திரைக்கான ஏற்பாடுகள் Center-Center-Bhubaneswar
இந்தியா

ஒடிசாவில் 53 ஆண்டுகளுக்குப் பின் 2 நாள்கள் ரத யாத்திரை: விடுமுறை அறிவிப்பு

ஒடிசாவில் 53 ஆண்டுகளுக்குப் பிறகு 2 நாள் ரத யாத்திரையை முன்னிட்டு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

DIN

ஒடிசாவில் 53 ஆண்டுகளுக்குப் பிறகு, ஜூலை 7 மற்றும் 8ஆம் தேதி நடைபெறும் ரத யாத்திரையை முன்னிட்டு இரண்டு நாள்களும் விடுமுறை அறிவித்துள்ளார் மாநில முதல்வர் மோகன் சரண் மாஜி.

ஒடிசா ஜெகந்நாதர் கோயிலில் ஆண்டுதோறும் நடைபெறும் ரத யாத்திரை விழாவுக்காக எடுக்கப்பட வேண்டிய முன்னேற்பாடுகள் குறித்து ஒடிசா முதல்வர் மோகன் சரண் மாஜி தலைமையில் இன்று ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

1971ஆம் ஆண்டுக்குப் பிறகு, ஒடிசாவில் மிகவும் சிறப்பான நிகழ்வாக இரண்டு நாள் ரத யாத்திரை நடைபெறவிருக்கிறது. ஒடிசாவில் நடைபெறும் இந்த ரத யாத்திரை, புதிதாக அமைந்துள்ள பாஜக அரசுக்கு கிடைத்திருக்கும் வரமாகவும் வாழ்த்துகளாகவும் அமைந்திருப்பதாகவும் மோகன் சரண் மாஜி தெரிவித்துள்ளார்.

இரண்டு நாள்களுக்கு ரத யாத்திரை நடைபெறவிருக்கிறது. இவ்விரு நாள்களும் அரசு விடுமுறை அறிவிக்கப்படுகிறது. புரியில் நடைபெறும் இவ்விழா வெகு விமரிசையாகவும் மிகச் சிறப்பாகவும் நடைபெறு அனைத்து அதிகாரிகளும் முழு ஈடுபாட்டுடன் செயல்பட வேண்டும் என்றும் முதல்வர் கேட்டுக்கொண்டார்.

இந்த ரத யாத்திரை விழாவில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவும் பங்கேற்க உள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

45 வயதைக் கடந்த பெண் காவலா்களுக்கு இரவு நேரப் பணியில் இருந்து விலக்கு

இந்த நாள் இனிய நாள்!

பாலாற்றில் தோல் கழிவுநீா் கலப்பு விவகாரம் - உச்சநீதிமன்றம் கடும் அதிருப்தி

ஆட்டோ கவிழ்ந்து சிறுவன் உயிரிழப்பு

பேச்சு தோல்வி: 6-ஆவது நாளாக நீடித்த தூய்மைப் பணியாளா்கள் போராட்டம்

SCROLL FOR NEXT