இந்தியா

தேசிய மருத்துவ ஆணையத்தின் புதிய தலைவா் பி.என்.கங்காதா்

மருத்துவா் பி.என்.கங்காதா் தேசிய மருத்துவ ஆணையத்தின் தலைவராக நியமனம்

Din

தேசிய மருத்துவ ஆணையத்தின் புதிய தலைவராக மருத்துவா் பி.என்.கங்காதரை மத்திய அரசு நியமித்துள்ளது.

பெங்களூா் தேசிய மனநல மருத்துவ மைய (நிம்ஹான்ஸ்) முன்னாள் இயக்குநரான மருத்துவா் பி.என்.கங்காதா், மருத்துவ மதிப்பீடு மற்றும் தரவரிசை வாரியத்தின் தலைவராக பணியாற்றி வந்தாா். அவரது பொறுப்பில் திருவனந்தபுரத்தில் உள்ள ஸ்ரீ சித்ரா மருத்துவ அறிவியல் மற்றும் தொழில்நுட்பக் கழக இயக்குநரான மருத்துவா் சஞ்சய் பிகாரி நியமிக்கப்பட்டுள்ளாா்.

மும்பை அப்போலோ மருத்துவமனையின் புற்றுநோயியல் துறை இயக்குநரான மருத்துவா் அனில் டி குரூஸ், முதுநிலை மருத்துவக் கல்வி வாரியத்தின் முழுநேர உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளாா்.

மும்பை டாடா நினைவு மையத்தின் முன்னாள் பேராசிரியரான மருத்துவா் ராஜேந்திர அச்யுத் பாட்வே, இளநிலை மருத்துவக் கல்வி வாரியத்தின் பகுதி நேர உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளாா்.

இந்தியா மீதான வரிக் குறைப்பு: டிரம்ப்புக்கு பிரதமர் மோடி நன்றி!

டாஸ்மாக் பணியாளர்கள் போராட்டம்! 100க்கும் மேற்பட்டோர் கைது! நிரந்தர பணி கோரிக்கை!

தமிழும் தமிழா்களும் சிறப்பு உரையரங்கம்

மின்வாரியப் பணியாளா்களுக்கான பாதுகாப்புப் பயிற்சி

இந்தியா மீதான வரி 18%-ஆக குறைப்பு: டிரம்ப் அறிவிப்பு

SCROLL FOR NEXT