முகப்பு
இந்தியா

ஆந்திரத்திற்கு வரிச்சலுகை: சந்திரபாபு நாயுடு கோரிக்கை!

ஆந்திரத்தில் நிதிப் பற்றாக்குறையைச் சமாளிப்பதற்கு வரிச்சலுகை வேண்டும் என்று ஆந்திர முதல்வர் கோரிக்கை

இந்தியா

ஆந்திரத்திற்கு வரிச்சலுகை: சந்திரபாபு நாயுடு கோரிக்கை!

ஆந்திரத்தில் நிதிப் பற்றாக்குறையைச் சமாளிப்பதற்கு வரிச்சலுகை வேண்டும் என்று ஆந்திர முதல்வர் கோரிக்கை

Updated On : 4 ஜூலை, 2024 at 10:24 AM
பகிர்:

ஆந்திரப் பிரதேசத்திற்கு வரிச்சலுகை வழங்க வேண்டும் என்று சந்திரபாபு நாயுடு பிரதமர் மோடியிடம் கோரிக்கை வைத்துள்ளார்.

ஆந்திரப் பிரதேசத்தில் நிலவி வரும் நிதிநெருக்கடி குறித்து ஆலோசிப்பதற்காக சந்திரபாபு நாயுடு இன்று (ஜூலை 4) காலை தில்லி சென்றிருந்தார். பிரதமரைச் சந்தித்த சந்திரபாபு நாயுடு, ஆந்திரத்தில் நிலவும் நிதிநெருக்கடியைச் சமாளிப்பதற்காக, வரிச்சலுகை வேண்டும் என்று பரிசீலித்துள்ளார். இதன்மூலம், ஆந்திரத்தின் நிதிநெருக்கடி கட்டுக்குள் வரும் என்று கூறப்படுகிறது.

பிரதமரைச் சந்தித்த பின்னர், மத்திய அமைச்சர்களான பியூஷ் கோயல் மற்றும் நிதின் கட்கரியையும் சந்தித்துள்ளார்.

இதுகுறித்துதெலுங்கு தேசக்கட்சி அளித்துள்ள தகவல்களின்படி, கடந்த ஆட்சியான ஜெகன்மோகன் ரெட்டி தலைமையிலான ஒய்.எஸ்.ஆர்.சி.பி. ஆட்சியின்போது, மார்ச் 31, 2024-ன் வரையில் ஆந்திரத்தின் மொத்த நிதிப் பற்றாக்குறை ரூ.55,817.50 கோடி என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இது 2014 முதல் 2019 வரையிலான தெலுங்கு தேசக்கட்சி ஆட்சியின்போது இருந்த நிதிப் பற்றாக்குறையைவிட 57 சதவிகிதம் அதிகரித்துள்ளது.

மேலும், மக்களவைத் தேர்தலின்போது, ஆந்திரத்திற்கு சிறப்பு மாநில அந்தஸ்து கோரி தெலுங்கு தேசக்கட்சி வலியுறுத்தியிருந்தது. ஆனால், இப்போது ஒடிசா மற்றும் பிகாரும் சிறப்பு மாநில அந்தஸ்தைக் கோருவதால், ஆந்திரத்திற்கு வரிச்சலுகை கோரலாம் என்று முடிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

முழு கட்டுரையைப் படிக்க →