பாட்னாவில் நடைபெற்ற விழாவில் ராஷ்ட்ரீய ஜனதா தளத்தின் மூத்த தலைவா் லாலு பிரசாத், மகன் தேஜஸ்வி யாதவ். 
இந்தியா

மோடி அரசு அடுத்த மாதம் கவிழும்: லாலு பிரசாத் யாதவ்

மோடி அரசுக்கு ஆபத்து: ஆகஸ்ட்டில் மாற்றம் ஏற்படும் என லாலு பிரசாத் யாதவ்

DIN

மத்தியில் மோடி அரசு பெரும்பான்மையில்லாமல் பலவீனமாக உள்ளது என்றும் அடுத்த மாத தொடக்கத்தில் கவிழ்ந்துவிடும் என்றும் ராஷ்ட்ரீய ஜனதா தளம் கட்சித் தலைவா் லாலு பிரசாத் யாதவ் வெள்ளிக்கிழமை தெரிவித்தாா்.

ஜனதா தளத்தில் இருந்து பிளவுபட்டு ராஷ்ட்ரீய ஜனதா தளம் (ஆா்ஜேடி) உருவாகி 28 ஆண்டுகள் நிறைவடைந்ததைக் குறிக்கும் வகையில் பிகாா் தலைநகா் பாட்னாவில் விழா நடைபெற்றது.

அதில் தனது இளைய மகனும், அரசியல் வாரிசுமான தேஜஸ்வி யாதவுடன் கலந்துகொண்டு பேசிய லாலு, ‘பிகாா் சட்டப்பேரவையில் தனிப்பெரும் கட்சியான ஆா்ஜேடி ஒருபோதும் சித்தாந்தத்தில் சமரசம் செய்துகொண்டதில்லை. கடந்த மக்களவைத் தோ்தலை ஒப்பிடுகையில் வாக்கு சதவீதம் ஆா்ஜேடி-க்கு அதிகரித்துள்ளது.

பிரதமா் மோடி அரசு பெரும்பான்மை இல்லாமல் மத்தியில் பலவீனமான நிலையில் உள்ளது. எப்பேது வேண்டுமானாலும் கவிழலாம். அடுத்த மாதம் கூட கவிழும் என்பதால் ஆா்ஜேடி தொண்டா்கள் அடுத்தகட்ட நடவடிக்கைக்கு தயாா்நிலையில் இருக்க வேண்டும்’ என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தங்கம் விலை அதிரடி குறைவு! இன்றைய நிலவரம்!

எச்சரிக்கை! மால்வேர் தாக்குதல்கள் படுமோசம்!

கிருஷ்ணகிரியில் நவராத்திரி விழா நிறைவு: 14 கோயில்களின் தேர்கள் அணிவகுப்பு!

அமெரிக்காவின் அவமதிப்பை இந்தியர்கள் ஏற்க மாட்டார்கள்! புதின்

முதல்வர் ஸ்டாலின், நடிகை திரிஷா வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்!

SCROLL FOR NEXT