மணீஷ் சிசோடியா (கோப்புப்படம்) 
இந்தியா

மணீஷ் சிசோடியாவின் காவல் ஜூலை 15 வரை நீட்டிப்பு!

மணீஷ் சிசோடியாவின் நீதிமன்றக் காவல் ஜூலை 15 வரை நீட்டித்து தில்லி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

DIN

ஆம் ஆத்மி கட்சித் தலைவர் மணீஷ் சிசோடியாவின் நீதிமன்றக் காவல் ஜூலை 15 வரை நீட்டித்து தில்லி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கலால் கொள்கை வழக்கில் தில்லி முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியாவை மத்திய புலனாய்வுத் துறை(சிபிஐ) கடந்தாண்டு பிப். 26 ஆம் தேதி கைது செய்து திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். பணமோசடி வழக்கு தொடர்பாக அமலாக்கத்துறையும் தொடர்ந்து சிசோடியாவிடம் விசாரித்து வருகின்றது.

இந்த நிலையில், மணீஷ் சிசோடியாவின் நீதிமன்றக் காவல் இன்றுடன் நிறைவடைந்த நிலையில், அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது வழக்கு விசாரணைக்கு கூடுதல் அவகாசம் வழங்க வேண்டும் என சிபிஐ தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது.

இந்த நிலையில், சிசோடியாவின் நீதிமன்றக் காவல் ஜூலை 15 வரை நீட்டித்து தில்லி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நல்ல நாள் இன்று: தினப்பலன்கள்!

இன்றுமுதல் 50% வரி! டிரம்ப்பின் அழைப்பை 4 முறை மறுத்த பிரதமர் மோடி?

கோவாவில் அக்டோபா் - நவம்பரில் ஃபிடே உலகக் கோப்பை செஸ் போட்டி

ஆவுடையாா்கோவிலில் தலையில்லா புத்தா் சிலை கண்டெடுப்பு

அரசுப் பணி: விண்ணப்பங்களை வரவேற்கும் தமிழக அரசு

SCROLL FOR NEXT