இந்தியா

பிகாரில் மின்னல் தாக்கி 9 பேர் பலி!

பிகாரில் மின்னல் தாக்கி 9 பேர் பலியாகினர்.

DIN

பிகாரில் உள்ள 6 மாவட்டங்கலில் கடந்த 24 மணி நேரத்தில் மின்னல் தாக்கியதில் 9 பேர் பரிதாபமாக பலியாகியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பிகாரின் ஜெஹனாபாத், மாதேபுரா, கிழக்கு சாம்பரன், ரோதாஸ், சரண், சுபால் ஆகிய மாவட்டங்களில் மின்னல் தாக்கியதில் 9 பேர் பலியாகியுள்ளனர்.

மின்னல் தாக்கி பலியானவர்களின் குடும்பத்துக்கு இரங்கல் தெரிவித்த பிகார் முதல்வர் நிதீஸ்குமார், அவர்களின் குடும்பத்துக்கு ரூ. 4 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் எனத் தெரிவித்துள்ளார்.

பிகார் முதல்வர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையின் படி, ஜெஹனாபாத்tஹில் 3 பேரும், மாதேபுராவில் 2 பேரும், கிழக்கு சாம்பரன், ரோதாஸ், சரண், சுபால் மாவட்டங்களில் தலா ஒருவரும் மின்னல் தாக்கி பலியாகியுள்ளனர்.

பேரிடர் மேலாண்மைத் துறையின் ஆலோசனைகளை மக்கள் பின்பற்ற வேண்டும் என்று பிகார் முதல்வர் நிதீஸ் குமார் மக்களிடம் வலியுறுத்தியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சோளிங்கரில் கேட்பாரற்று கிடந்த குழந்தை மீட்பு

மழை வருமோ... ராதிகா கௌஷிக்!

தீவிரமடையும் நெல் அறுவடைப் பணிகள்

உங்களை உணரும் கலை... தீப்தி சுனைனா!

ஹூண்டாய் புதிய வென்யூ கார் அறிமுகம் - புகைப்படங்கள்

SCROLL FOR NEXT