புணேவில் உள்ள கல்லூரியின் ஆண்கள் விடுதியில் ஏற்பட்ட தீ விபத்தால் பரபரப்பு நிலவியது.
மகாராஷ்டிர மாநிலம், புணே நகரில் உள்ள கல்லூரியின் ஆண்கள் விடுதியில் ஞாயிற்றுக்கிழமை காலை தீ விபத்து ஏற்பட்டது. கல்லூரி ஊழியர்கள் உடனடியாக தீயணைப்பு கருவிகளை பயன்படுத்தி தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டதுடன், தீயணைப்பு துறை மற்றும் மின்சார துறையினரை தொடர்பு கொண்டனர்.
தீயணைப்புத் துறையினர் விரைந்து வந்து தீயை முழுமையாக அணைத்ததாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார். விடுதியின் வெளிப்புறச் சுவரில் பொருத்தப்பட்டிருந்த மின் மீட்டரில் ஏற்பட்ட மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் எனக் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
அதிர்ஷ்டவசமாக இந்த சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. தீயணைப்புப் படையினர் அனைவரின் பாதுகாப்பையும் உறுதிசெய்து மேலும் சேதம் ஏற்படாமல் தடுத்தனர். தீவிபத்து ஏற்பட்ட கல்லூரி தனியார் கல்விச் சங்கத்தால் நிர்வகிக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.